வாஷிங்டன்:
மெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் தீபாவளி வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார்.

இந்தியாவில் தீபாவளி பண்டிகை விமரிசையாக கொண்டாடப்பட்டு வருகிறது. அதேபோல், உலகம் முழுவதும் இந்துக்களால் தீபாவளி பண்டிகை கொண்டாடப்படுகிறது. தீபாவளி பண்டிகையை ஒட்டி உலக தலைவர்கள் இந்து மக்களுக்கு வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.  அந்த வகையில், அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்பும் தீபாவளி வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார். தனது டுவிட்டர் பக்கத்தில் டிரம்ப் வாழ்த்துச்செய்தியை பகிர்ந்துள்ளார்.