வாஷிங்டன்
அமெரிக்காவில் விர்ஜீனிய எம் பி சுஹாஷ் சுப்ரமணியம் பகவத் கீதை மீது பதவி பிரமாணம் செய்துள்ளார்.
கடந்த நவம்பர் 5-ந்தேதி நடந்து முடிந்த அமெரிக்க அதிபர் தேர்தலில், பெரும்பான்மையான இடங்களில் முன்னாள் அதிபர் டிரம்ப் சார்ந்த குடியரசு கட்சி கைப்பற்றியதால் டிரம்ப் வருகிற 20 ஆம் தேதி அடுத்த அதிபராக பதவியேற்கவுள்ளார்.
தற்போது நடந்து வரும் அமெரிக்காவின் நாடாளுமன்ற, உறுப்பினர்கள் பதவி பிரமாணம் எடுத்து கொள்ளும் நிகழ்ச்சியில், கிழக்கு கடற்கரையில் இருந்து சென்ற விர்ஜீனிய எம்பி சுஹாஷ் சுப்ரமணியம் பகவத் கீதை மீது பதவி பிரமாணம் எடுத்துள்ளார். இதனால் அவர் பக்வத் கீதை மீது பதவி பிரமாணம் செய்த முதல் இந்திய-அமெரிக்க பிரதிநிதி என்ற பெருமையை பெற்றுள்ளார்.
சுஹாஷ் சுப்ரமணியம் இது குறித்து,
“அமெரிக்க நாடாளுமன்றத்திற்கு விர்ஜீனியாவில் இருந்து உறுப்பினராக பதவி பிரமாணம் எடுத்து கொண்ட முதல் இந்திய-அமெரிக்க பிரதிநிதி மற்றும் தெற்காசிய உறுப்பினராக என்னுடைய தாயார் பெருமை பொங்க என்னை பார்த்தார்.
உறுப்பினராக தேர்ந்தெடுக்கப்பட்ட தகவலை தாயாரிடம் முதலில் தெரிவிக்கும்போது, நம்ப முடியாதவராக அவர் காணப்பட்டார். ஆனால், விர்ஜீனியாவின் முதல் உறுப்பினராக நான் தேர்ந்தெடுக்கப்பட்டு உள்ளேன். இது நிச்சயம் கடைசி அல்ல. இதற்காக நான் அதிக பெருமை கொள்கிறேன்
எனத் தெரிவித்துள்ளார்.