நியூயார்க்: இந்திய தயாரிப்பான கோவாக்சின் கொரோனா தடுப்பூசியை அவசரகால பயன்பாட்டுக்கு உலக சுகாதார நிறுவனம் அனுமதி வழங்கியுள்ள நிலையில், அமெரிக்கா தொடர்ந்து அனுமதி மறுத்து வருகிறது.

இந்தியாவின் பாரத் பயோடெக் நிறுவனம் தயாரித்த கோவேக்சின் தடுப்பூசி இந்தியா மற்றும் பல்வேறு நாடுகளின் அவசரகால தேவைக்கு அனுமதிக்கப்பட்டு பொதுமக்களுக்கு போடப்பட்டு வருகின்றது.  பாரத் பயோடெக் நிறுவனத்தின் அமெரிக்க ஒப்பந்ததாரராக  ஒகுஜென் நிறுவனம்  உள்ளது. அந்நிறுவனம் சார்பில் கோவேக்சின் தடுப்பூசியை அமெரிக்காவில் அவசரகால தேவைக்கு பயன்படுத்திக் கொள்ள அனுமதி கோரியிருந்தது. ஆனால், அஒகுஜென் நிறுவனம் அளித்த கோரிக்கையை அமெரிக்க உணவு மற்றும் மருந்து கட்டுப்பாட்டு அமைப்பு நிராகரித்துள்ளது.

மேலும், கோவேக்சின் தடுப்பூசியை அவசரகால பயன்பாட்டிற்கு விண்ணப்பிக்க கூடுதல் பரிசோதனை முடிவுகளை சமர்பிக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது.

[youtube-feed feed=1]