உறியடி’ மற்றும் ‘உறியடி 2’ ஆகிய படங்களை இயக்கி, நடித்தவர் விஜயகுமார். இரண்டு படங்களுமே விமர்சன ரீதியாக நல்ல வரவேற்பைப் பெற்றன.

‘சூரரைப் போற்று’ படத்துக்கு விஜயகுமார், வசனம் எழுதினார்.

இந்நிலையில், தனது அடுத்த படத்தை அறிவித்துள்ளார் விஜயகுமார். இந்த முறை நாயகனாக மட்டுமே நடிக்கவுள்ளார். இந்தப் படத்தை விஜயகுமாரிடம் உதவி இயக்குநராகப் பணிபுரிந்த அபாஸ் இயக்கவுள்ளார்.

ரீல் குட் ஃபிலிம்ஸ் நிறுவனம் தயாரிக்கவுள்ள இந்தப் படத்தில் விஜயகுமார் பல்வேறு கெட்டப்களில் நடிக்கவுள்ளார்.