சுல்தான்பூர்
ராகுல் காந்தி அவதூறு வழக்கு விசாரணைக்கு நேரில் ஆஜராக வேண்டும் என நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷாவுக்கு எதிராக கடந்த 2018-ம் ஆண்டு காங்கிரஸ் தலைவ்ர் ராகுல் காந்தி ஆட்சேபத்திற்குரிய கருத்துகளை பேசியதாக கூறி, பா.ஜ.க.வை சேர்ந்த விஜய் மிஸ்ரா என்பவர் க அவதூறு வழக்கு தொடர்ந்தார். வழக்கு தொடர்பான விசாரணை சுல்தான்பூரில் உள்ள எம்.பி., எம்.எல்.ஏ.க்கள் மீதான வழக்குகளை விசாரிக்கும் நீதிமன்றத்தில் நடைபெற்று வருகிறது.
கடந்த பிப்ரவரி 20-ந்தேதி நட்ந்த விசாரணைக்காக அமேதியில் நடந்த பாரத் ஜோடோ நியாய யாத்திரையை தற்காலிகமாக நிறுத்திவிட்டு ராகுல் காந்தி நீதிமன்றத்தி ஆஜரானபோது அவருக்கு ஜாமீன் கிடைத்தது. இந்த வழக்கு கடந்த மாதம் 26ம் தேதி மீண்டும் விசாரணைக்கு வந்தபோது 2ம் தேதி (அதாவது இன்று) ராகுல் காந்தி விசாரணைக்கு நேரில் ஆஜராக வேண்டும் என கோர்ட்டு உத்தவிட்டிருந்தது.
இன்று இந்த வழக்கு மீண்டும் விசாரணைக்கு வந்தபோது ராகுல் காந்தியின் வழக்கறிஞர் காசி பிரசாத் சுக்லா, ராகுல் காந்தி இன்று கோர்ட்டில் நேரில் ஆஜராக வேண்டியநீலையில் நடந்து கொண்டிருக்கும் நாடாளுமன்ற கூட்டத்தொடர் காரணமாக அவரால் நேரில் ஆஜராக முடியவில்லை என்பதால் இந்த வழக்கை விசாரிக்க புதிய தேதியை அறிவிக்குமாறு கோரிக்கை வைத்தார்.
நீதிபஹ் ஷுபம் வர்மா வழக்கறிஞரின் விண்ணப்பத்தை பரிசீலித்தார். அதன் பிறகு நீதிபதி வரும் 26ம் தேதி ராகுல் காந்தியை நேரில் ஆஜராகுமாறு உத்தரவிட்டார்.