டில்லி:

நாடு முழுவதும் பரபரப்பை ஏற்படுத்தி வரும், உ.பி. மாநிலம் உன்னாவ் பாலியல் வழக்கை சிபிஐ விசாரணைக்கு எடுத்துக்கொண்டுள்ள நிலையில், பாலியல் குற்றவாளியான  பாஜக எம்எல்ஏ குல்தீப் செங்கார் உள்பட 10 பேர் மீது சிபிஐ வழக்கு பதிவு செய்துள்ளது.

கடந்த 201ம் ஆண்டு உ.பி.மாநிலம் உன்னாவ் பகுதியைச் சேர்ந்த  16 வயது சிறுமியை வேலை வாங்கித்தருவதாக அழைத்துச்சென்று கூட்டு பாலியல் வன்புணர்வு செய்ததாக, பாஜக எம்எல்ஏ குல்தீப் செங்கார் உள்பட பலர் மீது புகார் கூறப்பட்டது.

இந்த விவகாரத்தை யோகி அரசு முறையாக விசாரிக்காமல் முடக்கிய நிலையில், பாதிக்கப்பட்ட பெண் முதல்வர் யோகி வீட்டு முன்பு தீக்குளிக்க முயன்றதால், பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இதையடுத்து, அந்த பெண்ணின் தந்தை மர்மமான முறையில் இறந்தார். இந்த நிலையில், உறவினர் ஒருவரை பார்க்கச் சென்ற உன்னாவ் பாலியல் வன்முறைக்கு ஆளான பெண் சென்ற கார்மீது லாரி மோதி  விபத்து ஏற்பட்டது.

இதில், அதிர்ஷ்டவசமாக அந்த பெண் தப்பித்துக்கொண்ட நிலையில், இந்த விவகாரம் நாடாளு மன்றத்தில் அமளியை ஏற்படுத்தியது. இதையடுத்து, பாஜக எம்.எல்.ஏ. குல்தீப் செங்கரை கட்சியில் இருந்து நீக்கி பாஜக தலைமை உத்தரவிட்டது.

இதையடுத்து, செங்கார் உள்பட 10 பேர் மீது சி.பி.ஐ.வழக்குப்பதிவு செய்துள்ளது.