சென்னை: சென்னையில் துக்ளக் ஆசிரியர் ஆடிட்டர் குருமூர்த்தியின் இல்லம் மீது பெட்ரோல் குண்டு வீச மர்ம நபர்கள் முயன்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.
சென்னை மயிலாப்பூரில் குருமூர்த்தியின் வீடு உள்ளது. அந்த வீட்டில் வழக்கம் போல பந்தோபஸ்து பணியில் போலீசார் ஈடுபட்டிருந்தனர். அப்போது அவ்வழியே இரு சக்கர வாகனத்தில் 2 பேர் வந்துள்ளனர்.
அவர்களில் ஒருவர் கையில் பெட்ரோல் குண்டு வைத்திருந்ததை கண்டு உஷார் அடைந்த காவலர் சத்தமிட்டுள்ளார். உடனடியாக அவர்கள் அங்கிருந்து அசுர வேகத்தில் தப்பிச் சென்றுவிட்டனர்.
இது தொடர்பாக மயிலாப்பூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து தொடர்ந்து விசாரித்து வருகின்றனர். அந்த பகுதியில் கூடுதலாக போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.
Patrikai.com official YouTube Channel