நியூயார்க்:
ஜம்மு காஷ்மீரில் கடந்த சில நாட்களாக வன்முறை சம்பவங்கள் அதிகரித்து வருகின்றன. பாதுகாப்புப் படையினர் மீது கல்வீச்சு உள்ளிட்ட அசம்பாவித சம்பவங்கள் நடந்து வருகிறது.
இந்த வன்முறை கும்பல் சமூக வலைதளங்களை தவறாகப் பயன்படுத்தி இவ்வாறு செயல்படுவதாக குற்றச்சாட்டு எழுந்தது. இதனால் பேஸ்புக், வாட்ஸ்ஆப் உட்பட 22 சமூக வலைதளங்களுக்கு ஒரு மாத காலத்திற்கு தடை விதித்து உள்துறை உத்தரவிட்டது.
இந்நிலையில் காஷ்மீரில் சமூக வலைதளங்கள் மீது விதிக்கப்பட்டு உள்ள தடையை இந்தியா நீக்கவேண்டும் என ஐ.நா. தெரிவித்துள்ளது.
‘‘பிரச்னைக்கு பேச்சுவார்த்தை மூலம் தீர்வு காண வேண்டும். காஷ்மீரில் சமூக வலைதளங்கள் மீது விதிக்கப்பட்டு உள்ள தடையை இந்தியா நீக்கவேண்டும். இது அடிப்படை உரிமைகளை பாதிக்கும்’’ என ஐ.நா. மனித உரிமைகள் ஆணைய அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.