வாஷிங்டன்:
யுனைடெட் ஏர்லைன்ஸ் விமானம் இன்ஜின் செயலிழந்த பின்னும் பாதுகாப்பாக தரையிறங்கிய அதிசயம் அமெரிக்காவில் நடந்துள்ளது.

யுனைடெட் ஏர்லைன்ஸ் விமானம் சனிக்கிழமை பிற்பகல், டென்வர் சர்வதேச விமான நிலையத்திலிருந்து புறப்பட்டது. விமானம் கிளம்பிய சிறிது நேரத்திலேயே விமானத்தின் இன்ஜின் செயலிழந்தது. இதையடுத்து வானத்திலே வட்டமிட்ட அந்த விமானம்.

இதையடுத்து, விமானிகள் விமானப் போக்குவரத்துக் கட்டுப்பாட்டுக்கு அறையை தொடர்பு கொண்டு விமானத்தை பாதுகாப்பாக தரையிறக்கியுள்ளனர். விமானத்தில் பயணித்த 231 பயணிகள் மற்றும் 10 விமான ஊழியர்கள் அனைவரும் பாதுகாப்பாக தரையிறக்கப்பட்டதாக விமான நிறுவனம் தெரிவித்துள்ளது.

விமானம் செயலிழந்த நேரத்தில் விமானத்தில் பயணித்த பயணிகள் அது தொடர்பான வீடியோவைப் பகிர்ந்துள்ளனர்.  இந்த விபத்து குறித்து விமான நிறுவன அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர்.