டெல்லி: மத்திய அமைச்சரவை இன்று மாலை விரிவாக்கம் செய்யப்பட உள்ள நிலையில், முக்கிய இலாகாக்காளை நிர்வகித்த 12 அமைச்சர்கள் தங்களது பதவிகளை ராஜினாமா செய்துள்ளனர். அவர்களின் ராஜினாமா ஏற்பட்டு உள்ளதாக ஜனாதிபதி மாளிகை அறிவித்து உள்ளது.

மோடி தலைமையிலான மத்திய அமைச்சரவை இன்று விரிவாக்கம் செய்யப்படுகிறது. தமிழ்நாடு பாஜக மாநில தலைவர் எல்.முருகன் உள்பட 43 பேர் புதிய அமைச்சர்களாக பதவி ஏற்க உள்ளனர்.
இந்த நிலையில், இன்று மத்திய அமைச்சர்கள் ரவிசங்கர் பிரசாத், பிரகாஷ் ஜவ்டேகர், ஹர்ஷ்சவர்தன், ரமேஷ் பொக்ரியால் உள்பட 12 அமைச்சர்கள், தங்களது பதவிகளை ராஜினாமா செய்தனர். அவர்களின் ராஜினாமா ஏற்பட்டு உள்ளதாக ஜனாதிபதி மாளிகை அறிவித்து உள்ளது.
[youtube-feed feed=1]தமிழ்நாடு பாஜக தலைவர் எல்.முருகன் உள்பட இன்று பதவி ஏற்கபோகும் 43புதிய அமைச்சர்கள் … முழு விவரம்…