இந்தி நடிகர் சுஷாந்த் சிங் ராஜ்புத் தற்கொலை செய்து கொண்டார். அவரது மறைவுக்கு பாலிவுட் முதல் கோலிவுட் வரை அஞ்சலி செலுத்தினர்.

மத்திய அமைச்சர் ரவி சங்கர் பிரசாத் பாட்னாவில் உள்ள சுஷாந்த் சிங் வீட்டுக்கு நேரில் சென்று அவரது உருவ படத்துக்கு. மலர் தூவி அஞ்சலி செலுத் தினார்.
இது பற்றிய படத்தை வெளியிடுள்ள அமைச்சர், ‘சுஷாந்த் திறமையானவர். திரையலகில் இன்னும் நிறைய சாதனைகள் செய்ய தகுதி உள்ளவர். அவரது இழப்பு வருத்தத்துக்குரியது. பாட்னா வீட்டுக்கு சென்று அஞ்சலி செலுத்தினேன். அவரது தந்தை, குடும்பத் தாரிடம் எனது இரங்கலை தெரிவித்தேன்.
இவ்வாறு அமைச்சர் ரவி சங்கர் பிரசாத் தெரிவித் துள்ளார்.
[youtube-feed feed=1]