டெல்லி: தமிழகத்தில் சாலை போக்குவரத்து திட்டங்களுக்காக பல கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது. இதை மத்திய சாலை போக்குவரத்து துறை அமைச்சர் நிதின் கட்கரி தகவல் தெரிவித்துள்ளார்.
மத்திய சாலை போக்குவரத்து துறை அமைச்சர் நிதின் கட்கரி வெளியிட்டுள்ள பதிவில், ஈரோடு மாவட்டத்தில் சுமார் 3 கிலோ மீட்டர் தூரம் உயர்மட்டம் பாலம் உட்பட மாநில நெடுஞ்சாலையை விரிவுப்படுத்த 36 கோடியே 45 லட்சம் ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளார்.
திருப்பூர் மாவட்டத்தில், மேட்டுக்கடை – மூத்தம்பாளையம் சாலையை விரிவுபடுத்த 6 கோடியே 85 லட்சம் ரூபாயும், ஈரோட்டில் மாநில நெடுஞ்சாலையை விரிவுபடுத்த ரூ.36 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டு உள்ளது.
மதுரை மாவட்டத்தில் உள்ள மாநில நெடுஞ்சாலை 154-ஐ விரிவுப்படுத்த 18 கோடியே 29 லட்சம் ரூபாய் நிதி ஒதுக்கப்பட்டுள்ளதாகவும், .
தஞ்சை,. திண்டுக்கல்லில் தர்மத்துப்பட்டி, ஆடலூர், தாண்டிக்குடி சாலையை விரிவுபடுத்த ரூ.5.8 கோடி ஒதுக்கீடு தஞ்சை – திருச்சி மாவட்டங்களை இணைக்கும் வகையில் ஒன்பதரை கிலோ மீட்டர் தூரத்திற்கு சாலை அமைக்கப்படும் என்றும், திருச்சியில் மேலத்தூர்-பத்தலப்பேட்டை சாலையை விரிவுபடுத்த ரூ.20 கோடி ஒதுக்கீடு.
திண்டுக்கல் மாவட்டத்தில் சாலை விரிவாக்கம் மற்றும் கால்வாய் தடுப்பு சுவர் கட்ட 5 கோடியே 80 லட்சம் ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளதாக குறிப்பிட்டுள்ளார்.
மேலும், மத்திய அரசு மேற்கொண்டு வரும் உள்கட்டமைப்பு திட்டங்களால் தமிழகம் வளர்ச்சி பெறும் என தெரிவித்துள்ளார்