டெல்லி: மத்திய பட்ஜெட் இன்று நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யப்பட உள்ள நிலையில், அதற்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல் வழங்கி உள்ளது. முன்னதாக குடியரசு தலைவரை சந்தித்து நிதியமைச்சர் வாழ்த்து பெற்றார்.

நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடர்  நேற்று (ஜூலை 22) தொடங்கி உள்ளது. இன்று நிதியமைச்சர் நிர்மலா சீத்தாராமன் 7வது முறையாக முழு பட்ஜெட்டை தாக்கல் உள்ளார். முன்னதாக, மத்திய பட்ஜெட் தாக்கல் செய்யப்படவுள்ள நிலையில், பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான மத்திய அமைச்சரவைக் கூட்டத்தில்  பட்ஜெட்டுக்கு ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது.

முன்னதாகல், நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் இன்று பட்ஜெட்டை தாக்கல் செய்யவுள்ள நிலையில், குடியரசுத் தலைவர் திரெளபதி முர்முவை சந்தித்து வாழ்த்து பெற்றார். அவருடன் நிதித்துறை இணையமைச்சர் பங்கஜ் செளத்ரி, தலைமைப் பொருளாதார ஆலோசகர் ஆனந்த நாகேஸ்வரன், மத்திய நிதியமைச்சக அதிகாரிகளும் குடியரசுத் தலைவரை சந்தித்தனர்.

இதனைத் தொடர்ந்து நாடாளுமன்றத்திற்கு வந்தார் மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன். மத்திய பட்ஜெட்டை நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தாக்கல் செய்வதற்கு முன்னதாக பிரதமர் மோடி தலைமையிலான அமைச்சரவைக் கூட்டத்தில் ஒப்புதல் அளிக்கப்பட்டது.

மத்திய நிதியமைச்சா் நிா்மலா சீதாராமன் தொடா்ந்து 7-ஆவது முறையாக பட்ஜெட்டை தாக்கல் செய்து சாதனை படைக்கிறார்.