டெல்லி: நிதியமைச்சர் நிர்மலா சீத்தாராமன் இன்று தாக்கல் செய்துள்ள பட்ஜெட்டில் உள்ள சிறப்பு அம்சங்கள்:
2024 பட்ஜெட்டில் வேலைவாய்ப்பு, திறன் மேம்பாடு, நடுத்தர மக்களின் நலன் ஆகியவற்றில் கவனம் செலுத்தப்பட்டுள்ளது.
புற்றுநோய் மருந்துக்கு வரிவிலக்கு புற்றுநோய் சிகிச்சைக்கு அளிக்கப்படும் மேலும் மூன்று மருந்துகளின் சுங்கவரியிலிருந்து விலக்கு அளிக்கப்படும்.
வேலைவாய்ப்பு, திறன் மேம்பாடு, நடுத்தர மக்களின் நலன் ஆகியவற்றில் கவனம் செலுத்தப்பட்டுள்ளது
மாதம். ரூ.5000 ஊக்கத் தொகையுடன் இந்தியாவில் உள்ள 500 டாப் நிறுவனங்களில் 1 கோடி இளைஞர்களுக்கு  வேலை வாய்ப்பு பயிற்சி வழங்கப்படும்

நாடு  முழுவதும் 20 லட்சம் இளைஞர்களுக்கு திறன் மேம்பாடு பயிற்சி வழங்கும் திட்டம்.

பிரதமர் நகர்ப்புற வீட்டு வசதி திட்டத்தின் கீழ் நகர்ப்புறங்களில் ஒரு கோடி வீடுகள் கட்டி தரப்படும். இதற்காக 10 லட்சம் கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளது – நிதியமைச்சர்

MSMEகளுக்கான காலக் கடன்களை எளிதாக்கும் நோக்கில் கடன் உத்தரவாதத் திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இந்தத் திட்டம் இந்த நிறுவனங்களுடன் தொடர்புடைய கடன் அபாயங்களைக் குறைக்கும். ஒவ்வொரு விண்ணப்பதாரரும் சுயநிதி உத்தரவாத நிதி மூலம் ரூ. 100 கோடி வரை கவரேஜ் பெறத் தகுதி பெறுவார்கள், மேலும் குறிப்பிடத்தக்க கடன் தொகைகள் கிடைக்கும்.

திவால் நடைமுறைகள் தொடர்பான பிரச்சனைகளுக்கு தீர்வு காண கூடுதல் தீர்ப்பாயங்கள் அமைக்கப்படும்.

வாராக்கடனை வசூலிப்பதற்கான சீர்திருத்த நடவடிக்கைகள் வலுப்படுத்தப்படும்

வேளாண்மைக்கு முன்னுரிமை

அடுத்த இரண்டு ஆண்டுகளில் ஒரு கோடி விவசாயிகளை இயற்கை விவசாயத்தில் ஈடுபடுத்த திட்டம். எண்ணெய் வித்துகள் உற்பத்தி அதிகரிக்கப்படும். வேளாண்மை மற்றும் அது சார்ந்த துறைகளுக்கு ரூ.1,52 கோடி ஒதுக்கீடு செய்யப்படும். ஊக்கத் தொகையுடன் கூடிய வேலைவாய்ப்பு, திறன் மேம்பாட்டுக்கு முன்னுரிமை

பிகார் மாநிலத்தில் வெள்ள பாதிப்பைத் தடுக்க ரூ.11 ஆயிரம் கோடி ஒதுக்கீடு.

அடுத்த இரண்டு ஆண்டுகளில் ஒரு கோடி விவசாயிகளை இயற்கை விவசாயத்தில் ஈடுபடுத்த திட்டம். நாட்டில் உள்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்த 5 ஆண்டுகளில் ரூ.11.1 லட்சம் கோடி ஒதுக்கீடு.

பருவநிலையை தாக்குப்பிடித்து வளரும் 102 வகையான புதிய பயிர்கள் அறிமுகம் செய்யப்பட உள்ளது

அடுத்த 5 ஆண்டுகளில் நாடு முழுவதும் 1 கோடி விவசாயிகளை இயற்கை விவசாயத்திற்கு தயார் செய்வோம்.

மத்திய பட்ஜெட்டில் வேளாண்துறைக்கு ரூ.1.52 லட்சம் கோடி நிதி ஒதுக்கீடு

கிசான் கிரெடிட் கார்ட் 5 மாநிலங்களில் முதல் கட்டமாக அறிமுகப்படுத்தப்படும்.

நாடு முழுவதும் உள்ள விவசாயிகளின் உற்பத்தி செய்யும் பொருட்களுக்கு MSP உறுதி செய்யப்பட்டுள்ளது.

தனியார் நிறுவனங்களுடன் இணைந்து சிறு அணுமின் நிலையங்கள் உருவாக்கப்படும்.

நேபாளம் உள்ளிட்ட நாடுகளில் பாயும் நதிகளால் பிகாரில் அடிக்கடி வெள்ள பாதிப்புகள் ஏற்படுவதைத் தடுக்க திட்டம் கொண்டு வரப்படும்.

பிகாரில் உள்ள புராதனமான கோயில்களை மேம்படுத்த திட்டம்.

நாளந்தா பல்கலையின் மேம்பாட்டுக்கும் சுற்றுலாத் துறையின் மேம்பாட்டுக்கும் கூடுதல் நிதி.

காசி விஸ்வநாதர் கோயில், உலகத்தரத்தில மேம்படுத்தப்படும். பிகார் கயா, புத்தகயா கோயில்கள் மேம்படுத்தப்படும்.