டெல்லி: நிதியமைச்சர் நிர்மலா சீத்தாராமன் தாக்கல் செய்து வரும் பட்ஜெட்டில் இடம்பெற்றுள்ள சிறப்பம்சங்கள்….

  • பிரதமரின் வீடு கட்டும் திட்டத்தின் கீழ் 3 கோடி புதிய இலவச வீடுகள் கட்டப்படும்
  • நாடு முழுவதும் பணிபுரியும் பெண்களுக்காக ஹாஸ்டல் மற்றும் தங்குமிடங்கள் அமைக்கப்படும்.
  • வேலைவாய்ப்பில் பெண்களின் பங்களிப்பை அதிகரிப்பதற்கு முன்னுரிமை அளிக்கப்படும்
  • பிற மாநிலங்களுக்கு சென்று பணியாற்றும் தொழிலாளர்களுக்கு குறைந்த செலவில் அரசு மற்றும் தனியார் பங்களிப்பில் தங்குமிடம் அமைத்து தரப்படும்
  • முதல் முறை பணிக்குச் செல்பவர்களுக்கு, அரசு ஒரு மாத ஊதியம் ஊக்கத் தொகை வழங்கும் திட்டம் அமல்படுத்தபடும் மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன்
  • ஆந்திராவில் பிரிக்கும் போது கொடுத்த வாக்குறுதிகள் அனைத்தும் நிறைவேற்றப்படும்-மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன்.
  • உயர்கல்விக் கடனுக்கான உச்சவரம்பு ரூ.10 லட்சமாக உயர்வு.
  • கிசான் கிரெடிட் கார்டு 5 மாநிலங்களில் முதற்கட்டமாக அறிமுகப்படுத்தப்படும்.
  • காய்கறி உற்பத்திக்கு முக்கியத்துவம் கொடுத்து ஊக்குவிக்கப்படும்.
  • உள்நாட்டு கல்வி நிலையங்களில் கல்வி பயிலும் மாணவர்களுக்கு ரூ.10 லட்சம் வரை கடனுதவி வழங்கப்பட உள்ளது.
  • நாடு முழுவதும் 12 மெகா தொழில் பூங்காக்கள் அமைக்க ஒப்புதல் அளித்துள்ளதாக நிர்மலா சீதாராமன் அறிவிப்புமுதலீடுகளை ஊக்குவிக்கும் பொருட்டு 100 நகரங்களில் தொழில் பூங்காக்கள் உருவாக்கப்படும்
  • சிறு, குறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்களுக்கு ரூ.100 கோடி ஒதுக்கீடு, ஊரக வளர்ச்சிக்காக ரூ.2.66 லட்சம் கோடி ஒதுக்கீடு செய்யப்படும்ஹ
  • 500 முன்னணி நிறுவனங்கள் மூலம் நாட்டில் உள்ள ஒரு கோடி இளைஞர்களுக்கு புதிய இன்டர்ன்ஷிப் பயிற்சி திட்டம் அறிமுகம் செய்யப்படும். இன்டர்ன்ஷிப் பயிற்சி பெறும் இளைஞர்களுக்கு மாதம் ரூ.5,000 ஊக்கத்தொகை மற்றும் கூடுதலாக ரூ.6,000 நிதியுதவியும் வழங்கும்.
  • பிகார் மாநிலம் கயாவிலிருந்து பஞ்சாப் மாநிலம் அமிர்தசரஸ் வரை புதிய பொருளாதார மண்டலம் உருவாக்கப்படும்.
  • பிரதமரின் வீட்டு வசதி திட்டத்தின் கீழ் நகர்ப்புறங்களில் ஒரு கோடி வீடுகள் கட்டப்படும்.
  •  தொழில்துறையினருடன் இணைந்து பெண்கள் தங்கும் விடுதிகள் அமைக்கப்படும். 11:41 am, 23 ஜூலை 2024 புதிதாக பணியில் சேரும் இளைஞர்களுக்கு மத்திய அரசுத் தரப்பில் ஒரு மாத சம்பளம் வழங்கப்படும் என்று பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் 30 லட்சம் இளைஞர்கள் பயன்பெறுவார்கள்.
  • உற்பத்தித் துறையில் 5 ஆண்டுகளில் 1 கோடி இளைஞர்களுக்கு வேலை வாய்ப்பு பயிற்சி தரப்படும்.
  • மாணவர்களுக்கு மாதம் ரூ.5,000 உதவித் தொகை தரப்படும்.
  • இந்தியாவின் 500 பெரிய நிறுவனங்களில் தொழில் பயிற்சிக்கான வாய்ப்பு அளிக்கப்படும்.
  • ஊரகப் பகுதிகள் சார்ந்த திட்டங்களுக்கு ரூ.2.66 லட்சம் கோடி நிதி ஒதுக்கீடு.
  • தொழில்துறை உற்பத்தி துறையில் உள்ள சிறு, குறு நிறுவனங்களுக்கு ரூ.100 கோடி கடன் உத்தரவாதம் வழங்கப்படும்.
  • சிறு, குறு நிறுவனங்களுக்கு இயந்திரங்கள் வாங்க உத்தரவாதம் இல்லாமல் கடன் வழங்கப்படும்.
  • முத்ரா கடன் வரம்பு ரூ.10 லட்சத்திலிருந்து ரூ.20 லட்சமாக உயர்த்தி அறிவிக்கப்பட்டுள்ளது.
  • மத்திய அரசின் எந்த சலுகைகளையும் பெறாத மாணவர்களுக்கு கல்விக் கடன் ரூ.10 லட்சம் வரை வழங்கப்படும்
  • வேளாண் துறையில் டிஜிட்டல் மயம் புகுத்தப்படும். டிஜிட்டல் முறையில் காரீஃப் வேளாண் பயிர்கள் தொடர்பாக சர்வே எடுக்கப்படும்.
  • விவசாயத் துறைக்கு ரூ.1.52 லட்சம் கோடி ஒதுக்கீடு செய்யப்படும்.
  • இறால் வளர்ப்பு, பதப்படுத்துதல், ஏற்றுமதி ஆகியவற்றுக்கான நிதியுதவி நபார்டு மூலம் எளிதாக்கப்படும்.
  • வேலைவாய்ப்பு உருவாக்கம், திறன் மேம்பாட்டு நடவடிக்கைகள் ஊக்குவிக்கப்படும்.
  • தொழிற்சாலை ஊழியர்களுக்கு வாடகைக்கு வீடு வழங்கும் திட்டம் அரசு, தனியார் பங்களிப்புடன் செயல்படுத்தப்படும்.
  • குறு, சிறு நடுத்தர நிறுவனங்களை ஊக்குவிக்கும் வகையில் மின்னணு வர்த்தக ஏற்றுமதி மையங்கள் ஏற்படுத்தப்படும்.
  • வேலைவாய்ப்புடன் இணைந்த ஊக்குவிப்பு திட்டத்தின் மூலம் 30 லட்சம் இளைஞர்கள் பயன் பெறுவார்கள்.