சென்னை: குறுகிய அரசியல் லாபத்துக்காக விசாரணை அமைப்புகளின் நம்பகத்தன்மையை அடகு வைக்கக்கூடாது என மத்திய பாஜக அரசுக்கு முதலமைச்சர் ஸ்டாலின் கண்டனம் தெரிவித்துள்ளார்.

டெல்லி மதுபான வழக்கில், முன்னாள் முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் உள்பட அனைவரும் விடுதலை செய்யப்பட்டுள்ளத்தை சுட்டிக்காட்டி, மத்திய விசாரணை அமைப்புகளின் நம்பகத்தன்மை கேள்விக்குறியாகி உள்ளது என மத்திய பாஜக அரசுக்கு முதலமைச்சர் ஸ்டாலின் கண்டனம் தெரிவித்துள்ளார்.
‘உண்மையை உரக்க பேச வைத்த மரியாதைக்குரிய நண்பர் கெஜ்ரிவால் மற்றும் சிசோடியாவுக்கு வாழ்த்து. ஒன்றிய பாஜக அரசு குறுகிய அரசியல் லாபத்துக்காக விசாரணை அமைப்புகளின் நம்பகத்தன்மையை அடகு வைக்கக் கூடாது’ என மதுபான கொள்கை வழக்கில் இருந்து கெஜ்ரிவால், சிசோடியா உள்ளிட்டோர் விடுவிக்கப்பட்ட நிலையில் முதலமைச்சர் கருத்து தெரிவித்துள்ளார்.
முதல்வர் ஸ்டாலின் பதிவில், குறுகிய கால அரசியலுக்காக மத்திய பாஜக அரசு புலனாய்வு அமைப்புகளின் நேர்மையை அடகு வைக்கக் கூடாது. கொஞ்சம் வெட்கப்படுங்கள்.
வாழ்த்துக்கள், என் மதிப்பிற்குரிய நண்பர் திரு. @ArvindKejriwal, மற்றும் திரு. @msisodia , இவை அனைத்திலும் உறுதியாக நின்று உண்மையைத் தானே பேச அனுமதித்ததற்கு.
இவ்வாறு கூறி உள்ளார்.
மதுபான கொள்கை முறைகேடு வழக்கு: டெல்லி முன்னாள் முதல்வர் கேஜ்ரிவால், சிசோடியா விடுவிப்பு….
மதுபான கொள்கை வழக்கில் உண்மை வென்றது! கண்ணீருடன் செய்தியாளர்களிடம் பேசிய அரவிந்த் கெஜ்ரிவால்