கீவ்: ரஷ்யாவிற்கு எதிரான போரில்  இராணுவ அனுபவமுள்ள கைதிகளை ஈடுபட விரும்பினால், அவர்களையும் உக்ரைன் அரசு விடுவிக்கும் என உக்ரைன் ஜனாதிபதி வோலோடிமிர் ஜெலென்ஸ்கி தெரிவித்துள்ளார்.

உக்ரைன் மீது இன்று 5வது நாளாக தாக்குதல் நடத்தி வரும் ரஷியா இன்று சற்று தாக்குதலை குறைத்துள்ளது. அதே வேளையில், இரு நாடுகளுக்கும் இடையே பெலாரசில் இன்று பேச்சுவார்த்தையும் தொடங்க உள்ளது. இந்த நிலையில், தலைநகர் கீவ்வில் இருந்து மக்கள் சுதந்திரமாக வெளியேறலாம் என்று ரஷியா ராணுவ மும் அறிவித்து உள்ளது. இது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

முன்னதாக, உக்ரைனின் 975 ராணுவத்தளங்களை அழித்துள்ளதாகவும், 471 உக்ரைன் ராணுவத்தினரை கைது செய்துள்ளதாக ரஷ்ய ராணுவம் தகவல் தெரிவித்து உள்ளது. உக்ரைனின் தெற்கு மற்றும் தென்கிழக்கு பகுதியில் உள்ள இரண்டு முக்கிய நகரங்களை ரஷ்யா கைப்பற்றியுள்ளது. இதையடுத்து, அணு ஆயுத தடுப்பு படைகளை தயார் நிலையில் இருப்பதற்கு ரஷ்ய அதிபர் புதின் உத்தரவிட்டிருந்தார். இந்த நிலையில், மக்கள் தலைநகரில் இருந்து வெளியேறலாம் என்று கூறியிருப்பது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

இதற்கிடையில் நாட்டு மக்களுக்கு உரையாற்றிய உக்ரைன் அதிபர் வோலோடிமிர் ஜெலென்ஸ்கி‘, ரஷ்யாவிற்கு எதிரான போரில் சிறையில் உள்ள  இராணுவ அனுபவம் உள்ள கைதிகளை விடுவிக்கவும் தயாராக இருப்பதாக கூறியுள்ளார். ஏற்கனவே பொதுமக்கள் போரில் ஈடுபட விரும்பினால் ஆயுதங்களை தர தயாராக இருப்பதாக கூறிய நிலையில், தற்போது போரில் சிறை கைதிகளை இறக்கவும் உக்ரைன் அதிபர்  திட்டமிட்டு இருப்பதாக கூறப்படுறிது.