
லண்டன்
இங்கிலாந்து பிரதமர் தெரசா மே ரஷ்யாவின் 23 அதிகாரிகளை விலக்கி ரஷ்யாவுடனான உறவை துண்டித்துக் கொண்டுள்ளார்.
ரஷ்ய நாட்டின் முன்னாள் ஒற்றரான செர்கெய் ஸ்கிரிபால் (வயது 66), மற்றும் அவர் மகள் யூலியா (வயது 33) ஆகிய இருவரும் விஷம் அருந்திய நிலையில் சென்ற வாரம் கண்டெடுக்கப்பட்டுள்ளனர். அவர்களைக் காண வந்த ஒரு காவல் அதிகாரியும் அதே நிலையில் அவர்களுடன் காணப்ப்பட்டுள்ளார். ரஷ்ய நாட்டு அதிகாரிகள் இந்த கொலை முயற்சியில் ஈடுபட்டிருக்கலாம் என இங்கிலாந்து பிரதமர் தெரசா மே சந்தேகப்பட்டார்.
இதை ரஷ்யா மறுத்துள்ளது. ஆனால் அதை ஒப்புக் கொள்ளாத பிரதமர் இங்கிலாந்து தூதரகத்தில் பணி புரிந்த 23 அதிகாரிகளை விலக்கி உள்ளார். மேலும் ரஷ்யாவின் வெளியுறவுத் துறை அமைச்சருக்கு இங்கிலாந்து வருமாறு விடுத்திருந்த அழைப்பையும் திரும்பப் பெற்றுள்ளார். விலக்கி உள்ள 23 அதிகாரிகளும் இன்னும் ஒருவாரத்துக்குள் இங்கிலாந்தை விட்டு வெளியேற வேண்டும் என அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது.
ரஷ்யா இது குறித்து தெரிவிக்கையில் ஒற்றர் மற்றும் அவரது மகள் மீது நடந்த கொலை முயற்சிக்கும் ரஷ்ய அரசுக்கும் எவ்வித சம்மந்தமும் இல்லை என அறிவித்த பிறகும் இங்கிலாந்து இவ்வாறு நடவடிக்கை எடுத்தது தவறானது என ரஷ்ய அரசு தெரிவித்துள்ளது.
ஆனால் தெரசா மே, “ரஷ்யாவினிந்த செயல் இங்கிலாந்து அரசுக்கு எதிரானது. இது போல குற்றமற்ற மக்களின் உயிருக்கு அபாயம் ஏற்படுத்த ரஷ்யா முயல்கிறது. இந்த நாட்டில் இவ்வாறு நிகழ்வதினால் இங்கிலாந்து நாட்டுக்கு அவப்பெயர் உண்டாக்க ரஷ்யா முயற்சி செய்கிறது. ரஷ்யாவுடனான நல்லெண்ண உறவுகளை இங்கிலாந்து விலக்கிக் கொள்கிறது” எனத் தெரிவித்துள்ளார்.
பிரதமரின் இந்த நடவடிக்கைகளுக்கு அமெரிக்க அதிபர் ட்ரம்பின் ஆதரவு தான் காரணம் எனவும் அவருடைய ஆலோசனைப்படியே இந்த நடவடிக்கைகள் எடுக்கப் பட்டுள்ளதாகவும் இங்கிலாந்து நாட்டு அரசியல் ஆர்வலர்கள் தெரிவித்துள்ளனர்.
[youtube-feed feed=1]