லண்டன்:

இங்கிலாந்தில் உள்ள சிறையில் இறந்துபோன எலியின் வயிற்றுக்குள் போதைப் பொருட்கள்,செல்போன்கள்,சிம் கார்டுகளை வைத்து சிறைக்குள் தூக்கி எறிந்ததை அதிகாரிகள் கண்டு பிடித்தனர்.


தெற்கு இங்கிலாந்தில் டார்ஸ்டடில் உள்ள சிறைக்குள் இறந்து போன 3 எலிகள் கிடந்தன. அவற்றை அகற்றும் போது, அவற்றின் வயிற்றுக்குள் போதைப் பொருட்கள், பணம், சிகரெட்,மொபைல் போன்கள், சிம் கார்டுகளை வைத்து தைத்து இருந்தது தெரியவந்தது.

இதனையடுத்து, கைதிகளிடம் நடத்திய மருத்துவ பரிசோதனையில், அவர்கள் போதைப் பொருளை பயன்படுத்தியதற்கான அறிகுறி தென்பட்டது.

இது குறித்து பிரிட்டன் சிறைத்துறை அமைச்சர் ரோரி ஸ்டீவார்ட் கூறும்போது, இந்த சம்பவத்தைப் பார்க்கும்போது, சிறைக்குள் போதைப் போதைப் பொருட்களை கிரிமினல்கள் கடத்தியிருப்பது தெரிகிறது. எனவே, பாதுகாப்பை மேம்படுத்துவது முக்கியம் என்றார்.