இளங்நிலை பட்டப்படிப்பு (UG) மாணவர்கள் தங்கள் பட்டப்படிப்புகளை நிலையான நிர்ணயிக்கப்பட்ட காலத்திற்கு முன்னதாகவோ அல்லது அதற்குப் பின்னரோ முடிக்க அனுமதிக்கும் புதிய விதிமுறைகளுக்கு பல்கலைக்கழக மானியக் குழு (UGC) ஒப்புதல் அளித்துள்ளது.

மாணவர்களை மையமாகக் கொண்டு அணுகுமுறையுடன் உயர்கல்வியில் நெகிழ்வுத்தன்மையை மேம்படுத்தும் நோக்கில் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மாணவர்கள் விரும்பினால் இனி 4 மற்றும் 3 ஆண்டு கால இளங்நிலை பட்டப்படிப்பை ஓராண்டுக்கு முன்னரே படித்து முடிக்கலாம் அல்லது தேவைப்பட்டால் கூடுதலாக ஓராண்டு எடுத்துக் கொள்ளலாம்

இந்த முறையின் கீழ் பயில விரும்பும் மாணவர்களின் தகுதியை மதிப்பிட உயர்கல்வி நிறுவனங்கள் ஒரு குழுவை அமைக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த புதிய முறை வரும் கல்வி ஆண்டு முதல் அமலுக்கு வரும் என UGC அறிவித்துள்ளது.