சென்னை: அமைச்சர் உதயநிதிக்கு துணைமுதல்வர் பதவி உறுதியாகி உள்ளது. இதை கொளத்தூர் நிகழ்ச்சியில், முதலமைச்சர் ஸ்டாலின் சூசகமாக தெரிவித்து உள்ளார்.
அதாவது, தமிழக அமைச்சரவையில் மாற்றம் இருக்கும், ஏமாற்றம் இருக்காது எனவும் தெரிவித்துள்ளார். இதன்முலம் அமைச்சர் உதயநிதி துணை முதல்வராவது உறுதியாகி உள்ளது.
முதலமைச்சர் ஸ்டாலின் இனறு தனது சொந்த தொகுதியான கொளத்தூர் பகுதிக்கு சென்று பல்வேறு திட்டப்பணிகளை ஆய்வு செய்தார். கொளத்தூர் எனது சொந்த தொகுதி. நான் எப்போது வேண்டுமானாலும் இங்கு வருவேன். இங்கு நடைபெற்றுவரும் நலத்திட்ட பணிகளை ஆய்வு செய்தேன் என்றார். தொடர்ந்து, ஜிகேஎம் காலனியில் புதிதாக கட்டப்பட்டுள்ள தொடக்கப்பள்ளியை முதலமைச்சர் திறந்து வைத்தார்.
பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்தபோது, செய்தியாளர்கள் அவரிடம், துணைமுதல்வர் பதவி, வெளிநாட்டு முதலீடு உள்பட பல்வேறு நிகழ்வுகள் குறித்து கேள்வி எழுப்பினர்.
இதற்கு பதில் கூறிய மு.க.ஸ்டாலின், தமிழக அமைச்சரவையில் மாற்றம் இருக்கும்; ஏமாற்றம் இருக்காது என பதிலளித்தார்.
மேலும், “வெளிநாட்டு முதலீடுகள் குறித்து அமைச்சர் டி.ஆர்.பி. ராஜா விரிவான அறிக்கை கொடுத்துள்ளார். அமெரிக்க முதலீடுகள் குறித்து டி.ஆர்.பி.ராஜா வெளியிட்ட அறிக்கை வெள்ளை அறிக்கை தான் என்றவர், அதிமுக ஆட்சியில் வெள்ளை அறிக்கை எப்படி இருந்தது என்பது நன்றாகவே தெரியும் என்றார்.
வடகிழக்கு பருவமழை தொடர்பான கேள்விக்கு, வடகிழக்கு பருவமழையை எதிர்கொள்ள அரசு தயாராக உள்ளது என தெரிவித்தார்.
ஏற்கனவே இதுதொர்பான கேள்விக்கு பதில் கூறிய கோரிக்கை வலுத்துள்ளதே தவிர பழுக்கவில்லை என்று கூறியதுடன் நிச்சயமாக நீங்கள் எதிர்பார்க்கக்கூடிய சூழ்நிலை உருவாகும் என நம்புகிறேன் எனத் தெரிவித்திருந்தார்.
இந்த நிலையில், தற்போது, அமைச்சரவையில் மாற்றம் இருக்கும் என ஸ்டாலின் கூறியிருப்பது, உதயநிதி துணை முதல்வர் ஆவார் என்பதை உறுதி செய்துள்ளது.
கடந்த சட்டமன்றத் தேர்தலில் திருவல்லிக்கேணி தொகுதியில் வெற்றி பெற்றதுமே உதயநிதிக்கு அமைச்சரவையில் இடம் கிடைக்கும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் சில மாதங்களுக்கு பின்பே அமைச்சரவையில் இடம் கிடைத்தது. விளையாட்டுத்துறை அமைச்சரானார். அப்போதிலிருந்தே நல்ல ஆக்டிவாக அனைவரும் விரும்பக்கூடிய அமைச்சராகவே வலம் வருகிறார். அவருக்கு ஆதரவாக பெரும்பாலான அமைச்சர்களே ஆதரவு கரம் தூக்கியுள்ள நிலையில், அவர் துணைமுதல்வராக உறுதி என நம்பப்படுகிறது.