உடன்குடி: தூத்துக்குடி மாவட்டம் திருச்செந்தூரை அடுத்து உடன்குடி அருகே அமைக்கப்பட்டுள்ள புதிய அனல் மின்நிலையத்தின் முதல் அலகில், வரும் ஜூன் மாதத்திற்குள் வணிக ரீதியிலான மின் உற்பத்தியைத் தொடங்க தமிழ்நாடு மின்சார வாரியம் இலக்கு நிர்ணயித்துள்ளது.

தூத்துக்குடி மாவட்டம் உடன்குடி அருகே கல்லாமொழியில் ரூ.13,077 கோடியில் கட்டப்பட்டுள்ள 1320 மெகாவாட் (2×660 MW) திறன் கொண்ட உடன்குடி அனல்மின் நிலையத்தின் முதல் அலகை, 2026 மார்ச் 13-ஆம் தேதி முதல்வர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார். அதிநவீன சூப்பர் கிரிட்டிக்கல் தொழில்நுட்பத்துடன், சொந்த நிலக்கரி இறங்குதள வசதியைக் கொண்ட இந்த ஆலை, தமிழ்நாட்டின் மின் தேவையை பூர்த்தி செய்ய, குறிப்பாக கோடை காலத்தில் முக்கிய பங்காற்ற தயாராக உள்ளது.
இங்கு தலா 660 மெகாவாட் கொண்ட 2 அலகுகள் (மொத்தம் 1,320 மெகாவாட்) உள்ளன. இவை தற்போது சோதனை ஓட்டத்தில் இருக்கும் முதல் அலகில் சுமார் 400 மெகாவாட் மின்சாரம் உற்பத்தி செய்யப்பட்டு வருகிறது. அடுத்த வாரம் முதல் அதன் முழுத் திறனான 660 மெகாவாட் எட்டும் வகையில் பணிகளை அதிகாரிகள் தீவிரப்படுத்தியுள்ளனர்.

இந்த “சோதனை ஓட்டத்தின் போது ஏற்படும் தொழில்நுட்பக் கோளாறுகள் சரி செய்யப்பட்ட பிறகு, ஜூன் மாதம் முதல் வணிக ரீதியிலான உற்பத்தி முழுவீச்சில் தொடங்கும். இதன் மூலம் தமிழ்நாட்டின் கோடைக்கால மின்தேவை பெருமளவு பூர்த்தி செய்யப்படும்” என்றும் முதல் அலகின் பணிகள் நிலைபெற்றவுடன், விரைவில் 2-ஆவது அலகிலும் மின் உற்பத்திக்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
[youtube-feed feed=1]