ஹனோய்: வியட்நாம் நாட்டில் ஏற்பட்ட நிலச்சரிவில் சிக்கி ஒட்டுமொத்தமாக 35 பேர் பலியாகி உள்ளனர். 59 பேர் காணாமல் போயுள்ளனர்.

மத்திய வியட்நாமின் நம் டிரா மை மாவட்டத்தில் மோலாவி என்ற புயல் காரணமாக பலத்த மழை கொட்டியது. அதன் எதிரொலியாக 2 இடங்களில் நிலச்சரிவு ஏற்பட்டது.
இதையடுத்து அப்பகுதிகளில் தேசிய பேரிடர் மீட்புக்குழுவினரும், ராணுவத்தினரும் மீட்பு நடவடிக்கையில் இறங்கினர். அதில் 19 பேர் பலியாகி இருக்கின்றனர். 45 பேர் மாயமாகி உள்ளனர்.
ஒட்டுமொத்தமாக வியட்நாமில் மழை மற்றும் நிலச்சரிவில் சிக்கி இதுவரை 35 பேர் பலியாகி உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. தொடர்ந்து மாயமானவர்களை தேடும் பணி நடைபெற்று வருகிறது மீட்புக்குழு தெரிவித்து உள்ளது.
Patrikai.com official YouTube Channel