மும்பை: விமான நிலையத்தில் இரு விமானங்களில் இறக்கைகள் உரசியலால் பரபரப்பு ஏற்பட்டது. மயிரிழையில் அசம்பாவிதம் தவிர்க்கப்பட்டுள்ளது.
முப்பையில் இருந்து கோவைக்கு புறப்பட்ட ஏர் இந்தியா விமானமும், இண்டிகோ நிறுவன விமானத்தின் இறக்கைகள் உரசிக்கொண்ட விபத்தில், அதிர்ஷ்டவச மாக பெரும் அசம்பாவிதம் தவிர்க்கப்பட்டுள்ளது. இதைத் தொடர்ந்து, ஏர் இந்தியா விமானம் உடனடியாக தரையிறக்கப்பட்டது.

மும்பையில் இருந்து கோவைக்கு இயக்கப்படும் ஏர் இந்தியா விமானம், திட்டமிட்ட நேரத்தில் புறப்படுவதற்காக ஓடுபாதை வரிசையில் காத்திருந்த போது, அங்கு வந்த இண்டிகா நிறுவன விமானத்தின் இறக்கையுடன் உரசியதாக கூறப்படுகிறது. இரண்டு விமானங்களின் இறக்கைகளுக்கு இடையே ஏற்பட்ட உராய்வால், ஏர் இந்தியா விமானத்தில் சிறிய சேதம் ஏற்பட்டுள்ளது.
இதையடுத்து முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக, விமானம் உடனடியாக தொழில்நுட்ப பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டுள்ளது. விமானத்தில் இருந்த அனைத்த பயணிகளும் பாதுகாப்பாக இருப்பதாகவும், மாற்று பயணத்திற்கான ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டதாகவும் ஏர் இந்தியா நிறுவனம் தெரிவித்துள்ளது.
இந்த விபத்தானது, டேக்ஸி-வேயில் விமானம் காத்திருந்த போது, இண்டிகோ நிறுவன விமானத்தின் இறக்கையுடன் இந்த மோதல் நிகழ்ந்துள்ளது. இந்த உராய்வால் ஏற்பட்ட விபத்தை தொடர்ந்து, பாதுகாப்பு முன்னெச்சரிக்கையாக தொழில்நுட்ப ரீதியாக ஏர் இந்தியா விமானம் முழு பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டது. விமானக் குழுவானது பயணிகள் அனைவரும் பாதுகாப்பாக இருப்பதை உறுதி செய்தனர். அவர்கள் அனைவரையும் பத்திரமாக விமானத்தில் இருந்து வெளியேற்றி, உடனடியாகவும் வேறொரு விமானத்தில் பாதுகாப்பான பயணத்தை மேற்கொள்வதற்கான நடவடிக்கைகளையும் ஏர் இந்தியா தொடங்கியது. இறக்கைகள் உராய்வுடன் நின்றதால் மிகப்பெரிய விபத்து தவிர்க்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.
சம்பவம் தொடர்பாக நிலையான இயக்க நடைமுறைகளின்படி, இந்திய விமானப் போக்குவரத்து ஒழுங்குமுறை அமைப்பான சிவில் விமானப் போக்குவரத்து இயக்குநரகத்திற்குத் தெரிவிக்கப்பட்டுள்ளதாக ஏர் இந்தியா தரப்பு தெரிவித்துள்ளது. பயணிகளுக்கு ஏற்பட்ட சிரமத்திற்கு வருத்தம் தெரிவித்ததோடு, வாடிக்கையாளர்கள் மற்றும் பணியாளர்களின் பாதுகாப்புக்கு அதிக முன்னுரிமை அளிக்கப்படுவதாகவும் ஏர் இந்தியா உறுதி அளித்துள்ளது.
பாதிக்கப்பட்ட விமானத்தை மீண்டும் பயன்பாட்டிற்கு கொண்டு வருவதற்கு முன்பாக தொழில்நுட்பக் குழுக்கள் அதனை தீவிர சோதனைக்கு உட்படுத்தி யுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளடு. குறைந்த தாக்கம் கொண்டதாக இருந்தாலும் விமானப் பாதுகாப்பு நெறிமுறைகளின் கீழ் இதுபோன்ற நிகழ்வுகள் தீவிரமானதாக கருதப்படுகின்றன என்றும், இதன்படி சிறிய உரசல் தொடர்பாகவும் விமானங்கள் ஆய்வுக்கு உட்படுத்தப்பட வேண்டும் என்றும் விமான போக்குவரத்து இயக்குனரக அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.‘
[youtube-feed feed=1]