டெல்லி: தலைநகர் டெல்லியில் கைப்பற்றப்பட்ட ரூ.5,600 கோடி போதைப்பொருள் கடத்தலில் காங்கிரஸுக்கு தொடர்பு இருப்பதாக பாஜக எம்.பி. சுதன்ஷு திரிவேதி பகிரங்கமாக குற்றம் சாட்டி உள்ளார். இந்த கடத்தலில் தொடர்புடையோர் பெயரை அவர் குறிப்பிட்டுள்ளது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
தலைநகர் டெல்லியில் போதைப்பொருள் கடத்தல் சம்பவங்கள் அடிக்கடி நடைபெற்று வருகிறது. கடந்த ஆண்டு கைப்பற்றப்பட்ட போதை பொருள் கடத்தலில் தமிழ்நாட்டைச் சேர்ந்த ஜாபர் சாதிக் (முன்னாள் திமுக அயலக அணி பிரமுகர்) கைது செய்யப்பட்ட நிலையில், அதைத்தொடர்ந்து நாடு முழுவதும் போதை பொருள் தடுப்பு வேட்டை தீவிரப்படுத்தப்பட்டு வருகிறது.
இந்த நிலையில், டெல்லியில் மீண்டும் போதை பொருள் கடத்தல் நடைபெறுவதாக போலீஸுக்கு தகவல் கிடைத்தது. இந்த தகவலின் அடிப்படையில் மகிபல்பூர் பகுதியில் போலீஸார் சோதனை நடத்தினர். அப்போது 560 கிலோ கொக்கைன் போதைப்பொருள் பறிமுதல் செய்யப்பட்டது. இதன் சந்தை மதிப்பு ரூ. 5 ஆயிரத்து 600 கோடி ஆகும்.
டெல்லி மஹிபால்பூரில் உள்ள கிடங்கில் இருந்து ₹5,620 கோடி மதிப்புள்ள போதைப்பொருள் சரக்குகளை போதை பொருள் தடுப்பு பிரிவினர் பறிமுதல் செய்தனர். இந்த விநியோகஸ்தர் காங்கிரஸின் டெல்லி மாநிலப் பிரிவில் RTI பிரிவின் தலைவராக இருந்தது தெரிய வந்துள்ளது.
இந்த கடத்தல் சம்பவம் தொடர்பாக துஷார் கோயல், ஹிமசு குமார், அவுரங்கசீப் சித்திக், பாரத் குமார் ஆகிய 4 பேரை போலீஸார் கைதுசெய்து விசாரணை நடத்திவருகின்றனர். இவர்களில், துஷார் கோயல் காங்கிரஸ் பிரமுகர் என்பது தெரிய வந்துள்ளது. இவர் காங்கிரஸ் கட்சியின் டெல்லி மாநில பிரிவில் உள்ள RTI செல் தலைவராக இருந்தார் இவர் நாளை தேர்தல் நடைபெற உள்ள அரியானா மாநில தேர்தலில் பணியாற்றி வந்தவர் என்றும் கூறப்படுகிறது.
இதுகுறித்து செய்தியாளர்களிடம் பேசிய பாஜக தேசிய செய்தி தொடர்பாளரும், மாநிலங்களவை எம்.பி.யுமான சுதன்ஷு திரிவேதி, போதை பொருள் கடத்தல் சம்பவத்தில் காங்கிரஸ் கட்சிக்கும், கட்சி தலைமைக்கும் தொடர்பு இருப்பதாக குற்றம்சாட்டியுள்ளார்.
முக்கியமாக, nபாதை பொருள் கடத்தல் மன்னன் துஷார் கோயலுக்கு காங்கிரஸ் மூத்த தலைவர்களான கே.சி.வேணுகோபால் மற்றும் தீபந்தர் சிங் ஹூடா ஆகியோருடன் தொடர்பிருப்பதாக தெரிவித்தவர், இவர்களுடன் போதை பொருள் குற்றவாளி துஷார் கோயல் எடுத்த புகைப்படங்கள் கிடைத்திருப்பதாகவும், காங்கிரஸ் தலைவர் ஹூடாவின் அலைபேசி எண் துஷார்கோயலிடம் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.
மேலும், டெல்லி இளைஞர் காங்கிரஸ் ஆர்டிஐ பிரிவின் தலைவர் பதவி குற்றவாளி துஷார் கோயலுக்கு அளிக்கப்பட்டதற்கான நியமன ஆணைதன்னிடம் சிக்கி உள்ளதாக தெரிவித்தவர், அந்த நியமன கடிதத்தில் காங்கிரஸ் தலைவர்கள் சோனியா காந்தி மற்றும் ராகுல்காந்தியின் பெயர்கள் அச்சடிக்கப்பட்டிருப்பதாக பகிரங்கமாக குற்றம் சாட்டி உள்ளார்.
முன்னதாக, தெற்கு டெல்லியில் உள்ள திலக் நகரில் கடந்த சனிக்கிழமை போலீஸார் சோதனை நடத்தினர். இதில் ஆப்கானிஸ்தானைச் சேர்ந்த ஹசிமி முகமது வாரீஸ், அப்துல் நயீப் என்ற 2 அகதிகளிடமிருந்து 400 கிராம் ஹெராயின், 160 கிராம் கோகைன் போதைப் பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டன. அவர்களிடம் நடத்தப்பட்ட விசாரணையில், அவர்களுக்கு சர்வதேச போதைப் பொருள் கடத்தல் கும்பலுடன் தொடர்பு இருப்பது தெரிந்தது. இதையடுத்து தெற்கு டெல்லியில் போலீஸார் சோதனை நடத்தி 560 கிலோகொகைன் போதைப் பொருளைகைப்பற்றினர். இவற்றின் மதிப்புரூ.2,000 கோடிக்கும் மேல் இருக்கும் என மதிப்பிடப்பட்டுள்ளது. இது தொடர்பாக மேலும் 4 பேரை போலீஸார் கைது செய்துள்ளனர். அவர்களும் ஆப்கானிஸ்தானைச் சேர்ந்தவர்கள். இவர்கள் சர்வதேச அளவில் போதைப் பொருள்கடத்தல் கும்பலுடன் தொடர்புடையவர்கள். மணிப்பூர் மற்றும் இதர நான்கு மாநிலங்களில் இருந்து டெல்லிக்கு இவர்கள் போதைப் பொருட்களை கடத்தி விற்பனை செய்துள்ளனர்.