புதுச்சேரி,

திமுக இரு அணிகள் இணைப்பை அடுத்து, தினகரன் ஆதரவு எம்.எல்.ஏ.க்கள், எடப்பாடி அரசுக்கு அளித்துவரும் ஆதரவை திரும்பப் பெறுவதாக கவர்னரிடம் கடிதம் கொடுத்தனர்.

பிறகு அவர்கள் புதுச்சேரியில் உள்ள தனியார் ரிசார்ட்டில் பாதுகாப்பாக தங்க வைக்கப்பட்டு கண்காணிக்கப்பட்டு வருகின்றனர்.

அவர்கள் 18 பேரும்  கடந்த 3 நாட்களாக புதுச்சேரி ரிசார்ட்டில் ஆட்டம் பாட்டம், குடி, கூத்து என்று உல்லாசமாக பொழுதை கழித்து வருகின்றனர்.

பெண் எம்எல்ஏக்கள் தங்கள் கணவருடன் தங்கியிருந்து பொழுதை கழித்து வருகிறார்கள்.

இந்த நிலையில், இன்று காலை எம்எல்ஏக்கள் எழுந்தவுடன் ரிசார்ட் அருகே உள்ள சின்ன வீராம்பட்டினம் கடற்கரையில் நடை பயிற்சி மேற்கொண்டனர்.

பிறகு விடுதிக்கு பின்புறம் உள்ள குழந்தைகள் விளையாடும் மைதானத்தில் எம்.எல்.ஏக்கள் ஊஞ்சல், சறுக்கு மரம் என குழந்தைகள் விளையாட்டுகளை விளையாடினர்.

அடுத்ததாக தங்களுக்குள் அணிகளை பிரித்துகொண்டு வாலிபால் விளையாடினார்கள்.

குழந்தைகள் விளையாடும் சிறிய ஊஞ்சலில் உருவத்திலும், வயதிலும் பெரிய எம்எல்எல்ஏக்கள் அமர்ந்து  விளையாடியது பார்ப்போருக்கு நகைப்பை ஏற்படுத்தியது.