றைந்த தமிழக முதல்வர் ஜெயலலிதாவின் உடலை தோண்டி எடுத்து போஸ்மார்ட்டம் செய்ய வேண்டும் என்றும் வைதீக முறைப்படி எரிக்க வேண்டும் என்றும் அந்தணர் முன்னேற்றக் கழக தலைவர் ஜெயபிராகாஷ் கோரிக்கை வைத்துள்ளார்.

இது குறித்து நம்மிடம் பேசிய ஜெயபிகராஷ் தெரிவித்ததாவது:

“முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் மரணம் குறித்து நீதி விசாரணை நடத்த வேண்டும் என்று பல தரப்பில் இருந்தும் கோரிக்கை விடுக்கப்பட்டு வந்தது. இதை ஏற்று தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி,  நீதிவிசாரமை நடத்தப்படும் என்று அறிவித்துள்ளார். இது வரவேற்கத்தக்கது.

அதே நேரத்தில் எந்தெந்த விசயங்கள் குறித்து விசாரணை நடத்தப்போகிறார்கள் என்பதையும் அறிவிக்க வேண்டும். குறிப்பாக, ஜெயலலிதாவின் மரணம் குறித்து பல்வேறு சந்தேகங்கள், பல்வேறு தரப்பினரால் எழுப்பப்படுகின்றன. குறிப்பாக உடலில் காயங்கள் இருந்ததாக ஒரு யூகப் பேச்சு உண்டு.

ஜெயலலிதாவுடன் ஜெயபிகராஷ்

ஜெயலலிதாவுக்கு அவர் சார்ந்த ஐயங்கார் சாதி வைதீக முறைப்படி இறுதிச் சடங்குகள் செய்யப்படவில்லை. அப்படி செய்தால், ஜெயலலிதாவுக்கு ஆடை மாற்றி, குளிப்பாட்டியிருக்க வேண்டும். அதுபோல செய்தால், அவரது உடலில் இருந்த காயங்கள் தெரிந்துவிடும் என்பதால் வைதீக முறைக்கு எதிராக புதைக்கப்பட்டாரோ என்ற சந்தேகம் எங்களுக்கு இருக்கிறது.

ஆகவே ஜெயலிலதா உடலை தோண்டி எடுத்து போஸ்மார்ட்டம் செய்ய வேண்டும். பிறகு அவரது உடலை வைதீக முறைப்படி எரியூட்ட வேண்டும். இது குறித்து எடப்பாடி பழனிச்சாமிக்கும் கடிதம் எழுத இருக்கிறோம்” என்று அந்தணர் முன்னேற்றக் கழக தலைவர் ஜெயபிரகாஷ் நம்மிடம் தெரிவித்தார்.