சென்னை:  2023ம் ஆண்டு நடைபெற்ற குரூப் 1 தேர்வு முடிவை தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் வெளியிட்டுள்ளது. அதத்துடன் நேர் காணலுக்கான தேதிகளையும் அறிவித்து உள்ளது.

அதன்படி கடந்த 2023ம் ஆண்டு ஆண்டு ஆக.10 முதல் 13ம் தேதி வரை நடைபெற்ற குரூப் 1 பிரதான எழுத்துத் தேர்வின் முடிவு வெளியிடப்பட்டுள்ளது. தேர்வில் வெற்றி பெற்றவர்களுக்கு மார்ச் 26 முதல் 28ம் தேதி வரை நேர்காணல் நடைபெறும் என்று டிஎன்பிஎஸ்சி தெரிவித்துள்ளது.


தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் (TNPSC) ஒவ்வொரு ஆண்டும் பல்வேறு குரூப் 1 பதவிகளுக்கான TNPSC குரூப் 1 தேர்வை நடத்துகிறது. அதன்படி, கடந்த ஆண்டு,  TNPSC குரூப் 1 அறிவிப்பு வெளியிடப்பட்டது. அதன்படி,  துணை ஆட்சியர், துணைக் காவல் கண்காணிப்பாளர், உதவி ஆணையர் (வணிக வரிகள்), கூட்டுறவு சங்கங்களின் துணைப் பதிவாளர், ஊரக வளர்ச்சி உதவி இயக்குநர், மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலர் ஆகிய பணியிடங்களுக்கான தேர்வுகள் கடந்த ஆண்டு ஆகஸ்டு 10ந்தேதி முதல் 13ந்தேதி வரை நடைபெற்றது.

இந்த நிலையில், குரூப் 1 பிரதான எழுத்துத் தேர்வின் முடிவு வெளியிடப்பட்டுள்ளது. தேர்வில் வெற்றி பெற்றவர்களுக்கு மார்ச் 26 முதல் 28ம் தேதி வரை நேர்காணல் நடைபெறும் என்று டிஎன்பிஎஸ்சி தெரிவித்துள்ளது.

இந்த தேர்வான மூன்று நிலைகளில் நடைபெறும் , அதாவது முதல்நிலைத் தேர்வு, முதன்மைத் தேர்வு மற்றும் நேர்காணல் சுற்று. இந்த நிலையில், பிரதான முதன்மை தேர்வு முடிவுகள் வெளியாகி உள்ள நிலையில், அடுத்து நேர்காணல் நடைபெற்று பணி ஆணை வழங்கப்படும.டைபெற்ற