சிதம்பரம்:
சிதம்பரம் அண்ணாமலைப் பல்கலைக்கழக வளாகத்தில் இளைஞர் ஒருவர் மாணவியின் கழுத்தை அறுத்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது. ஒருதலைக் காதல் காரணமாக, பொறியியல் பட்டதாரி இளைஞர் இந்த கொலை முயற்சியில் ஈடுபட்டுள்ளது விசாரணையில் தெரிய வந்ததுள்ளது.
சிதம்பரம் அண்ணாமலை பல்கலைகழகத்தில் ஏராளமானோர் படித்து வருகின்றனர். வெளியூரை சேர்ந்தவர்கள் அங்கு விடுதியில் தங்கியும் படித்து வருகின்றனர்.
இந்நிலையில்,வேலூர் மாவட்டம் கதம்பம் பட்டி பகுதியை சேர்ந்த மாணவி லாவண்யா என்பவர் அங்குள்ள விடுதியில் தங்கி, அண்ணாமலை பல்கலையில் முதுகலை விவசாயம் படித்து வருகிறார். இன்று காலை வகுப்பு இடைவேளையின்போது வெளியே வந்த லாவண்யாவை மர்ம நபர் ஒருவர் மடக்கி அவரது கழுத்தை கத்தியால் அறுத்தால்.
இதன் காரணமாக வலியால் அலறினார் லாவண்யா. இதைக்கேட்டதும், அந்த பகுதியில் இருந்தவர்களும், மாணவ மாணவிகளும் ஓடிவந்தனர். இதையடுத்து, லாவண்யாவின் கழுத்தை அறுத்த வாலிபர் அங்கிருந்து ஓட முயன்றால். அவரை, அங்கிருந்த மற்றவர்கள் சுற்றி வளைத்து பிடித்து காவல்துறையினரிடம் ஒப்படைத்தனர்.
லாவண்யா உடனே சிதம்பரம் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டார். அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
இதுகுறித்து பிடிபட்ட வாலிபரிம் போலீசார விசாரணை நடத்தினர். அப்போது, லாவண்யாவை கழுத்தை அறுத்து கொலை செய்ய முயற்சித்தது, அவரது சொந்த ஊரை சேர்ந்த நவீன் என்பது தெரிய வந்தது.
பொறியியல் பட்டதாரியான நவீன், சென்னையில் உள்ள தனியார் நிறுவனம் ஒன்றில் வேலை செய்து வருவதாக வும், கடந்த 3 ஆண்டுகளாக லாவண்யாவை ஒருதலையாக காதலித்து வந்ததாகவும் கூறப்படுகிறது.
நவீனின் காதலை லாவண்யா ஏற்க மறுத்ததால்,லாவண்யாவை கொலை செய்ய முயற்சி செய்ததாக கூறப்படு கிறது.