டெல்லி: முன்னாள் பிரதமர் மறைந்த ராஜீவ் காந்தியின் நினைவு தினத்தையொட்டி, அவரது மகனும், காங்கிரஸ் தலைவருமான  ராகுல் காந்தி, இன்று  டெல்லியில் உள்ள அவரது நினைவிடத்தில் மரியாதை செலுத்தினார். தொடர்ந்து பிரியங்கா காந்தி, ராபர்ட் வதேரா மற்றும் காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர்கள் மரியாதை செலுத்தினர்.

முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தியின் 30வது ஆண்டு நினைவு தினம் இன்று(மே.21) அனுசரிக்கப்படுகிறது. இதையொட்டி, நாடு முழுவதும் உள்ள காங்கிரஸ் அலுவலகங்களில் அவரது உருவப்படங்கள், உருவச்சிலைக்கு மரியாதை செலுத்தப்படுகிறது.

இந்த நிலையில், டெல்லியில் உள்ள ராஜீவ் காந்தியின் நினைவிடத்தில், அவரது மகனும், எம்பியுமான ராகுல் காந்தி மலர் தூவி அஞ்சலி செலுத்தினார். இதேபோல் பல்வேறு தலைவர்களும் ராஜீவ் காந்தி நினைவிடத்திற்கு வந்து மரியாதை செலுத்தினர்.

மேலும், ராகுல் காந்தி தனது ட்விட்டர் பக்கத்தில், தந்தையை நினைவுக்கூறும் விதமாக, அவரது புகைப்படத்தைப் பதிவிட்டு, ‘உண்மை, இரக்கம், முன்னேற்றம்’ ” என பதிவிட்டுள்ளார்.