வாஷிங்டன்: எச்-1பி விசா தகுதியுள்ள பணியாளர்களை, அமெரிக்காவின் ஃபெடரல் ஏஜென்சிகள் பணிக்கு அமர்த்துவதை தடுக்கும் வகையிலான ஒரு உத்தரவில் கையெழுத்திட்டுள்ளார் அமெரிக்க அதிபர் டிரம்ப்.

இதன்மூலம், அமெரிக்கர்களுக்கான வேலை வாய்ப்பை பிற நாட்டவர் அபகரிப்பது தடுக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

“இந்த உத்தரவின் மூலம், வெளிநாட்டு பணியாளர்களுக்கான குறைந்த ஊதியத்தை காரணமாக வைத்து, அமெரிக்கர்களை பணியில் இருந்து நீக்கும் செயல்பாடு தடுக்கப்படும்” என்று கூறியுள்ளார் அந்நாட்டு அதிபர் டிரம்ப்.

இந்தப் புதிய உத்தரவின் மூலமாக, அந்நாட்டிலுள்ள அனைத்து ஃபெடரல் ஏஜென்சிகளும், அமெரிக்க குடிமக்களையே பணிக்கு அமர்த்தியுள்ளன என்பதை உறுதிசெய்யும் வகையில் உள்ளார்ந்த தணிக்கைக்கு உட்பட வேண்டும் என்பது குறிப்பிடத்தக்கது.