
வாஷிங்டன்: அடுத்தாண்டு ஜனவரி மாதம், வெள்ளை மாளிகைளை காலிசெய்யும் தற்போதைய அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப், புதிய அதிபர் ஜோ பைடனுடன் கைகுலுக்காமலேயே வெளியேறுவார் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன.
இதுதொடர்பாக, வெள்ளை மாளிகையின் மூத்த அதிகாரி ஒருவர், கடந்த 1991ம் ஆண்டு நடைபெற்ற என்பிஏ கூடைப்பந்து போட்டியில், வெற்றிபெற்ற சிகாகோ புல்ஸ் அணியினரிடம், தோல்வியடைந்த டெட்ராய்ட் பிஸ்டன் அணியின் நட்சத்திர வீரர்கள் கை குலுக்க மறுத்து, மைதானத்தை விட்டு வெளியேறிய சம்பவத்தை உதாரணமாக குறிப்பிட்டுள்ளார்.
இதன்மூலம், அதிபர் தேர்தலில் தனது தோல்வியை இன்னும் ஒப்புக்கொள்ளாத டிரம்ப், தேர்தலில் வென்று, வெள்ளை மாளிகையில் நுழையும் பைடனுடன் கைகுலுக்க மாட்டார் என்று தெரிகிறது.
கடந்த வெள்ளியன்று கோவிட்-19 தொடர்பாக நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பு மாநாட்டில் உரையாற்றிய டிரம்ப், கிட்டத்தட்ட தனது தோல்வியை ஒப்புக்கொண்டார் என்றே கூற வேண்டும்.
“இந்த நிர்வாகம், மற்றுமொரு கொரோனா முடக்கத்திற்கு அனுமதி வழங்காது. அதேசமயம், எதிர்காலத்தில் என்ன நடக்கும் என்பது தெரியாது. யாருக்கு தெரியும், அப்போது எந்த நிர்வாகம் இந்த நாட்டில் இருக்கும் என்று. காலம் பதில் சொல்லும் என்று நான் யூகிக்கிறேன்” என்றார் டிரம்ப்.
[youtube-feed feed=1]