மும்பை

டைபெற உள்ள மகாராஷ்டிரா சட்டசபை தேர்தலில் இரு தொகுதிகளில் இன்னும் தொகுதி உடன்பாடு ஏற்படவில்லை

மகாராஷ்டிராவில் வரும் நவம்பர் 20-ம் தேதி நடைபெறும் சட்டப்பேரவைத் தேர்தலில் ஆளும் பாஜக, சிவசேனா (ஏக்நாத் ஷிண்டே), தேசியவாத காங்கிரஸ் (அஜித் பவார்) ஆகிய கட்சிகளின் மகாயுதி கூட்டணிக்கும், காங்கிரஸ், சிவ சேனா (உத்தவ் தாக்கரே), தேசிய வாத காங்கிரஸ் (சரத் பவார்) கட்சிகளின் மகா விகாஸ் அகாடி கூட்டணிக்கும் இடையே நேரடி போட்டி நிலவுகிறது.

இவ்விரு கூட்டணியிலும் 3 பெரிய கட்சிகள் இருப்பதால் தொகுதிப்பங்கீடு பேச்சுவார்த்தையில் கடும் இழுபறி நிலவி வருகிறது. நேற்றிரவு வரை 2 கூட்டணிகளும் முழுமையான வேட்பாளர் பட்டியலை வெளியிடவில்லை.

இதில் மகாயுதி கூட்டணியில்இதுவரை வேட்பாளர்கள் அறிவிக்கப்பட்டு பா.ஜனதா 146 தொகுதிகளுக்கும், சிவசேனா 65 தொகுதிகளுக்கும், தேசியவாத காங்கிரஸ் 49 தொகுதிகளுக்கும் வேட்பாளர்களை அறிவித்து உள்ளது. மேலும் மகாவிகாஸ் அகாடி கூட்டணியில் காங்கிரஸ் 99 தொகுதிகளுக்கும், உத்தவ் தாக்கரே சிவசேனா 84 இடங்களுக்கும், தேசியவாத காங்கிரஸ் (எஸ்.பி.) 83 தொகுதிகளுக்கும் இதுவரை வேட்பாளர்களை அறிவித்து உள்ளன

இன்று வேட்பு மனு தாக்கல் செய்ய கடைசி நாள் என்பதால் இரு கூட்டணியிலும் தொகுதி பங்கீட்டை இறுதி செய்ய நேற்று இரவு விடிய, விடிய கட்சி தலைவர்கள் பேச்சுவார்த்தை நடத்தியும். தீர்வு காணப்படவில்லை இவ்விரு தொகுதிகளை ஒன்றுக்கும் மேற்பட்ட கட்சிகள் உரிமை கோருவதால், இழுபறி நீடித்து வருகிறது. இது மகாராஷ்டிர அரசியலில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.