ஜெய்ப்பூர்: ராஜஸ்தானின் கோடா மாவட்டத்தில் நடைபெற்ற படகு விபத்தில், மொத்தம் 14 பேர் உயிரிழந்துள்ளதாக தகவல்கள் கூறுகின்றன.
அம்மாவட்டத்திலுள்ள சம்பல் நதியில், ஒரு சிவன் கோவிலுக்கு, பெண்கள் & குழந்தைகள் உள்ளிட்ட 45க்கும் மேற்பட்ட பக்தர்கள் ஒரு படகில் சென்று கொண்டிருந்தனர். அப்போது, ஆற்றில் சென்று கொண்டிருந்த படகு கவிழ்ந்தது.
இதில், ஆற்றில் மூழ்கியோரில், 25 பேர் வரை நீந்தி கரையேறிவிட்டதாக அம்மாவட்ட காவல்துறை தரப்பில் கூறப்பட்டுள்ளது.
இந்நிலையில், மூழ்கி இறந்தோரில் 11 பேரின் உடல்கள் மீட்கப்பட்டுள்ளதாக அறிவித்தார் அம்மாவட்ட ஆட்சியர். இந்நிலையில், எஞ்சியோரை தேடும் பணி தொடர்ந்து நடைபெற்று வருகிறது என்று தகவல்கள் தெரிவிக்கின்றன.
இந்நிலையில், இறந்தவர்களின் குடும்பத்திற்கு தலா ரூ.1 லட்சம் மட்டுமே, மாநில அரசின் சார்பில் நிவாரணம் அறிவிக்கப்பட்டுள்ளது.