சென்னை: தமிழ்நாடு உள்பட நாடு முழுவதும் நாளை ரமலான் பண்டிகை கொண்டாடப்படும் என தலைமை காஜி அறிவிப்பு வெளியிட்டு உள்ளார்.

தமிழகம் முழுவதும் சனிக்கிழமை (மார்ச் 21) அன்று ஈதுல் ஃபித்ர் எனப்படும் நோன்பு பெருநாள் மிக உற்சாகமாகக் கொண்டாடப்படும் என்று தமிழ்நாடு அரசு தலைமை ஹாஜி முஃப்தி உஸ்மான் முஹ்யித்தீன் பாகவி அறிவித்துள்ளார்.
இஸ்லாமியர்களின் புனித நூலான குர்ஆன் ரமலான் மாதத்தில் தான் அருளப்பட்டது என்பதால், இஸ்லாமியர்கள் இந்த மாதத்தை புனித மாதமாக கருதி, மாதம் முழுக்க நோன்பினை கடைபிடிப்பார்கள். இஸ்லாமிய வழக்கத்தில் சந்திரனின் பிறை பார்க்கப்பட்டு மாதம் கணக்கிடப்படுகிறது. இஸ்லாமியர்களின் முக்கிய மாதமாக கருதப்படும் ரமலான் மாதத்திற்கான பிறை கடந்த பிப்ரவரி 19ஆம் தேதி தென்பட்டது. இதனைத்தொடர்ந்து இஸ்லாமியர்கள் ரலமான் நோன்பை மேற்கொண்டு வருகின்றனர். அதன்படி மாத்ததின் முடிவில் பிறை தென்பட்டால் ஒரு மாதத்தின் நாட்களை 29 உடன் நிறுத்திக் கொள்வார்கள். பிறை தென்படவில்லை என்றால் 1 நாளை சேர்த்து 30-ஆக பூர்த்தி செய்வார்கள்.
இந்த நிலையில் ஷவ்வால் மாதத்திற்கான பிறை வியாழக்கிழமை தென்படவில்லை. இதையடுத்து இந்தியாவில் நாளை ரமலான் பண்டிகை கொண்டாடப்படுகிறது.
தமிழ்நாடு அரசு தலைமை காஜி வெளியிட்டுள்ள அறிவிப்பில், ஷவ்வால் மாதத்துக்கான பிறை வியாழக்கிழமை தமிழகத்தின் எந்தப் பகுதியிலும் தென்படவில்லை என குறிப்பிடப்பட்டுள்ளது. எனவே ரமலான் மாதம் 30 நாட்களாக பூர்த்தியடைவதாகவும், இதனால் நாளை தமிழகம் முழுவதும் நோன்புப் பெருநாள் கொண்டாடப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. ரம்ஜான் கோப்புப்படம் இதேபோன்று, புதுச்சேரியிலும் சனிக்கிழமை ரம்ஜான் பண்டிகை கொண்டாட்டப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
[youtube-feed feed=1]