டெல்லி

நாளை இந்தியா கூட்டணி தலைவர்கள் தேர்தல் ஆணையை சந்திக்க டெல்லி செல்கின்றனர்.

கடந்த ஏப்ரல் 19 ஆம் தேதி தொடங்கி ஜூன் 1-ந்தேதி வரை 7 கட்டங்களாக நாடாளுமன்ற மக்களவை தேர்தல் நடைபெறுகிறது. இதில் இதுவரை 3 கட்ட தேர்தல்கள் நடந்து முடிந்துள்ளன. தேர்தல் ஆணையம் இந்த தேர்தல்களில் பதிவான வாக்கு சதவிகிதம் குறித்த விவரங்களை தேர்தல் ஆணையம் வெளியிட்டிருந்தது.

ஆனால் தேர்தல் ஆணையம் வெளியிட்ட வாக்கு சதவிகித விவரங்களில் குளறுபடி உள்ளதாக ‘இந்தியா’ கூட்டணியைச் சேர்ந்த தலைவர்கள் குற்றம்சாட்டி வருகின்றனர்.  ஏற்கனவே இது தொடர்பாக காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே ‘இந்தியா’ கூட்டணித் தலைவர்களுக்கு கடிதம் எழுதியிருந்தார்.

இந்தியா’ கூட்டணி கட்சி தலைவர்கள் நாளை டெல்லி சென்று இந்திய தேர்தல் ஆணையரை சந்திக்க திட்டமிட்டுள்ளனர். அப்போது வாக்குப்பதிவு சதவிகிதம் குறித்த விவரங்களை முறையாக வெளியிட வேண்டும் என வலியுறுத்த உள்ளனர்.

தேர்தல் பிரசாரத்தில் பா.ஜ.க.வினர் மத விவகாரங்களை பயன்படுத்துவது குறித்தும் தேர்தல் ஆணையத்திடம் ‘இந்தியா’ கூட்டணி தலைவர்கள் முறையிட உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.