சென்னை

மிழகத்தில்  இன்றைய (17/03/2021) மாவட்டம் வாரியான கொரோனா பாதிப்பு பட்டியல் வெளியாகி உள்ளது.

தமிழகத்தில் இன்று 945 பேருக்குப் பாதிப்பு உறுதி ஆகி மொத்தம் 8,62,374 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.  இதில் 12,564 பேர் உயிர் இழந்து 8,43,999 பேர் குணம் அடைந்து தற்போது 5,811 பேர் சிகிச்சையில் உள்ளனர்.

சென்னையில் மட்டும் இன்று 395 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி ஆகி உள்ளது.  இதுவரை சென்னையில் 2,39,878 பேர் பாதிக்கப்பட்டு 4,187 பேர் உயிர் இழந்து 2,33,414 பேர் குணம் அடைந்து தற்போது 2,277 பேர் சிகிச்சையில் உள்ளனர்.

இரண்டாம் இடத்தில் கோவை மாவட்டம் உள்ளது. இதுவரை கோவை மாவட்டத்தில் 56,731 பேர் பாதிக்கப்பட்டு 686 பேர் உயிர் இழந்து 55,539 பேர் குணம் அடைந்து தற்போது 506 பேர் சிகிச்சையில் உள்ளனர்.

மூன்றாவதாக செங்கல்பட்டு மாவட்டம் உள்ளது.  இதுவரை செங்கல்பட்டு மாவட்டத்தில் 53,862 பேர் பாதிக்கப்பட்டு 796 பேர் உயிர் இழந்து 52,567 பேர் குணம் அடைந்து தற்போது 499 பேர் சிகிச்சையில் உள்ளனர்.