சென்னை
தமிழகத்தில் இன்றைய (14/03/2021) மாவட்டம் வாரியான கொரோனா பாதிப்பு பட்டியல் வெளியாகி உள்ளது.
தமிழகத்தில் இன்று 759 பேருக்குப் பாதிப்பு உறுதி ஆகி மொத்தம் 8,59,726 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இதில் 12,547 பேர் உயிர் இழந்து 8,42,309 பேர் குணம் அடைந்து தற்போது 4,870 பேர் சிகிச்சையில் உள்ளனர்.
சென்னையில் மட்டும் இன்று 294 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி ஆகி உள்ளது. இதுவரை சென்னையில் 2,38,820 பேர் பாதிக்கப்பட்டு 4,176 பேர் உயிர் இழந்து 2,32,663 பேர் குணம் அடைந்து தற்போது 1,982 பேர் சிகிச்சையில் உள்ளனர்.
இரண்டாம் இடத்தில் கோவை மாவட்டம் உள்ளது. இதுவரை கோவை மாவட்டத்தில் 56,468 பேர் பாதிக்கப்பட்டு 685 பேர் உயிர் இழந்து 55,387 பேர் குணம் அடைந்து தற்போது 396 பேர் சிகிச்சையில் உள்ளனர்.
மூன்றாவதாக செங்கல்பட்டு மாவட்டம் உள்ளது. இதுவரை செங்கல்பட்டு மாவட்டத்தில் 53,585 பேர் பாதிக்கப்பட்டு 794 பேர் உயிர் இழந்து 52,394 பேர் குணம் அடைந்து தற்போது 397 பேர் சிகிச்சையில் உள்ளனர்.