சென்னை

மிழகத்தில்  இன்றைய (12/03/2021) மாவட்டம் வாரியான கொரோனா பாதிப்பு பட்டியல் வெளியாகி உள்ளது.

தமிழகத்தில் இன்று 670 பேருக்குப் பாதிப்பு உறுதி ஆகி மொத்தம் 8,58,272 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.  இதில் 12,539 பேர் உயிர் இழந்து 8,41,250 பேர் குணம் அடைந்து தற்போது 4,483 பேர் சிகிச்சையில் உள்ளனர்.

சென்னையில் மட்டும் இன்று 265 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி ஆகி உள்ளது.  இதுவரை சென்னையில் 2,38,288 பேர் பாதிக்கப்பட்டு 4,176 பேர் உயிர் இழந்து 2,32,151 பேர் குணம் அடைந்து தற்போது 1,961 பேர் சிகிச்சையில் உள்ளனர்.

இரண்டாம் இடத்தில் கோவை மாவட்டம் உள்ளது. இதுவரை கோவை மாவட்டத்தில் 56,349 பேர் பாதிக்கப்பட்டு 685 பேர் உயிர் இழந்து 55,297 பேர் குணம் அடைந்து தற்போது 367 பேர் சிகிச்சையில் உள்ளனர்.

மூன்றாவதாக செங்கல்பட்டு மாவட்டம் உள்ளது.  இதுவரை செங்கல்பட்டு மாவட்டத்தில் 53,450 பேர் பாதிக்கப்பட்டு 789 பேர் உயிர் இழந்து 52,292 பேர் குணம் அடைந்து தற்போது 369 பேர் சிகிச்சையில் உள்ளனர்.