சென்னை

மிழகத்தில்  இன்றைய (11/04/2021) மாவட்டம் வாரியான கொரோனா பாதிப்பு பட்டியல் வெளியாகி உள்ளது.

தமிழகத்தில் இன்று 6,618 பேருக்குப் பாதிப்பு உறுதி ஆகி மொத்தம் 9,33,424 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.  இதில் 12,907 பேர் உயிர் இழந்து 8,78,571 பேர் குணம் அடைந்து தற்போது 41,955 பேர் சிகிச்சையில் உள்ளனர்.

சென்னையில் மட்டும் இன்று 2,124 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி ஆகி உள்ளது.  இதுவரை சென்னையில் 2,65,126 பேர் பாதிக்கப்பட்டு 4,324 பேர் உயிர் இழந்து 2,45,041 பேர் குணம் அடைந்து தற்போது 15,761 பேர் சிகிச்சையில் உள்ளனர்.

இரண்டாம் இடத்தில் கோவை மாவட்டம் உள்ளது. இதுவரை கோவை மாவட்டத்தில் 63,197 பேர் பாதிக்கப்பட்டு 699 பேர் உயிர் இழந்து 58,447 பேர் குணம் அடைந்து தற்போது 4,051 பேர் சிகிச்சையில் உள்ளனர்.

மூன்றாவதாக செங்கல்பட்டு மாவட்டம் உள்ளது.  இதுவரை செங்கல்பட்டு மாவட்டத்தில் 60,792 பேர் பாதிக்கப்பட்டு 844 பேர் உயிர் இழந்து 56,170 பேர் குணம் அடைந்து தற்போது 3,778 பேர் சிகிச்சையில் உள்ளனர்.