சென்னை
தமிழகத்தில் இன்றைய (08/03/2021) மாவட்டம் வாரியான கொரோனா பாதிப்பு பட்டியல் வெளியாகி உள்ளது.
தமிழகத்தில் இன்று 556 பேருக்குப் பாதிப்பு உறுதி ஆகி மொத்தம் 8,55,677 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இதில் 12,521 பேர் உயிர் இழந்து 8,39,138 பேர் குணம் அடைந்து தற்போது 4,018 பேர் சிகிச்சையில் உள்ளனர்.
சென்னையில் மட்டும் இன்று 229 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி ஆகி உள்ளது. இதுவரை சென்னையில் 2,37,204 பேர் பாதிக்கப்பட்டு 4,166 பேர் உயிர் இழந்து 2,31,172 பேர் குணம் அடைந்து தற்போது 1,866 பேர் சிகிச்சையில் உள்ளனர்.
இரண்டாம் இடத்தில் கோவை மாவட்டம் உள்ளது. இதுவரை கோவை மாவட்டத்தில் 56,127 பேர் பாதிக்கப்பட்டு 685 பேர் உயிர் இழந்து 55,089 பேர் குணம் அடைந்து தற்போது 353 பேர் சிகிச்சையில் உள்ளனர்.
மூன்றாவதாக செங்கல்பட்டு மாவட்டம் உள்ளது. இதுவரை செங்கல்பட்டு மாவட்டத்தில் 53,168 பேர் பாதிக்கப்பட்டு 786 பேர் உயிர் இழந்து 52,071 பேர் குணம் அடைந்து தற்போது 311 பேர் சிகிச்சையில் உள்ளனர்.