நாக்பூர்
இன்று மகாராஷ்டிரா முதல்வர் தேவேந்திர பட்நாவிஸை சிவசேனா கட்சி தலைவர் உத்தவ் தாக்கரே சந்தித்துள்ளார்
கடந்த மாதம் 20-ந்தேதி நடைபெற்ற மகராஷ்டிரா சட்டசபை தேர்தல் முடிவுகள் 23-ந்தேதி வெளியானது. அதன்படி பா.ஜனதா, சிவசேனா மற்றும் தேசியவாத காங்கிரஸ் கட்சிகள் அடங்கிய மகாயுதி கூட்டணி அமோக வெற்றியை பதிவு செய்தது.
மும்பையில் கடந்த 5-ந்தேதி நடைபெற்ற பிரமாண்ட விழாவில் தேவேந்திர பட்னாவிஸ் முதல்வராக பதவியேற்றார். மேலும் சிவசேனா தலைவர் ஏக்நாத் ஷிண்டே, தேசியவாத காங்கிரஸ் தலைவர் அஜித்பவார் ஆகியோர் துணை முதல்-மந்திரிகளாக பதவியேற்றனர்.
இன்று சிவசேனா (யுபிடி) தலைவர் உத்தவ் தாக்கரே, முதல்வர் தேவேந்திர பட்னாவிஸை நாக்பூரில் விதான் பவனில் உள்ள அவரது அலுவலகத்தில் இன்று சந்தித்து பேசியுள்ளார்.
முதல்வர் பட்னாவிஸுக்கு உத்தவ் தாக்கரே பூச்செண்டு கொடுத்து வாழ்த்து தெரிவித்தார். சந்திப்பின்போது உத்தவ் தாக்கரேவுடன் ஆதித்யா தாக்கரே, அனில் பராப் மற்றும் வருண் சர்தேசாய் ஆகியோர் உடன் இருந்தனர்