வைக்கம்
இன்று வைக்கத்தில் பெரியார் நினைவகம் மற்றும் நூலகத்தை தமிழக முதல்வர் மு க ஸ்டாலின் திறந்து வைக்கிறார்.
கேரளாவில் உள்ள வைக்கம் நகரில் அமநிதுள்ள மகாதேவர் கோவில் இருக்கும் தெருவில் தாழ்த்தப்பட்ட வகுப்பைச் சார்ந்த ஈழவர்கள், தீயர்கள், புலையர்கள் முதலான சமுதாயத்தினர் நடந்து சென்றால் அது தீட்டு என்றும், எனவே அவர்கள் அங்கு செல்லவே கூடாது என்றும் தடை இருந்தது. கடந்த 1927 ஆம் ஆண்டு அந்த தடையை உடைப்பதற்காக பெரியார் நடத்திய வைக்கம் கோவில் நுழைவுப் போராட்டம் மிகப்பெரிய வெற்றியைப் பெற்றது.
பெரியாருக்கு வைக்கத்தில் அந்த வெற்றியை நினைவுகூறும் வகையில் நினைவகம் அமைக்கப்பட்டது. இதற்காக கேரள அரசு வழங்கிய நிலத்தில் தமிழக அரசின் சார்பில் அந்த நினைவகம் கட்டப்பட்டு 1994-ம் ஆண்டு திறந்து வைக்கப்பட்டது. நினைவகம் கட்டப்பட்டு பல ஆண்டுகள் ஆனதை தொடர்ந்து அதனை புனரமைக்க முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டு இதற்காக ரூ.8 கோடியே 14 லட்சம் நிதியும் ஒதுக்கினார்.
புனரமைப்பு பணிகளும், நூலகத்தை விரிவுபடுத்தும் பணிகளும் தமிழ் அரசின் பொதுப்பணித்துறையால் மேற்கொள்ளப்பட்டன. பெரியாரின் வாழ்க்கை வரலாறு தொடர்பான அரிய புகைப்படங்கள் அடங்கிய நிரந்தர புகைப்பட கண்காட்சிக் கூடம், நூலகம், பார்வையாளர் மாடம், சிறுவர் பூங்கா ஆகியவை சிறப்பான முறையில் புனரமைக்கப்பட்டுள்ளது.
அங்கு அமர்ந்த நிலையில் பெரியார் சிலை உள்ளது/ தமிழக முதல்வர் மு க ஸ்டாலின் புதுப்பிக்கப்பட்ட தந்தை பெரியார் நினைவகம் மற்றும் நூலகத்தை \ இன்று (வியாழக்கிழமை) காலை 10 மணிக்கு வைக்கத்தில் நடைபெறும் பெரியார் நினைவகம் மற்றும் பெரியார் நூலகம் திறப்பு விழாவில் பங்கேற்று திறந்து வைத்து சிறப்புரை ஆற்ற உள்ளார்.,