சென்னை
தமிழக முதல்வர் மு க ஸ்டாலின் இன்று பொங்கல் பரிசு தொகுப்பு விநியோகத்தை தொடங்கி வைக்கிறார்.
ஒவ்வொரு ஆண்டும் குடும்ப அட்டைதாரர்களுக்கு பொங்கல் பண்டிகையை முன்னிட்டு பொங்கல் தொகுப்பு வழங்கப்பட்டு வருகிறது. அதைப் போல் இந்த ஆண்டில் தமிழகத்தில் அனைத்து குடும்ப அட்டைதாரர்களுக்கு பொங்கல் பரிசு தொகுப்பாக, ஒரு கிலோ பச்சரிசி, ஒரு கிலோ சர்க்கரை மற்றும் முழு கரும்பு வழங்கப்பட உள்ளது.
தமிழக அரசு இதற்காக ரூ.250 கோடி நிதி ஒதுக்கீடு செய்துள்ள நிலையில் , பொங்கல் பரிசு தொகுப்பு வழங்கும் திட்டத்தை தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் இன்று தொடங்கி வைக்கிறார்.
முதல்வர் மு க ஸ்டாலின் சென்னை சைதாப்பேட்டை 169-வது வார்டில் பொங்கல் பரிசு தொகுப்பு வழங்கும் திட்டத்தை தொடங்கி வைப்பதையடுத்து, பொங்கல் பரிசு தொகுப்பு தமிழகம் முழுவதும் இன்று முதல் 13 ஆம் தேதி வரை விநியோகம் செய்யப்பட உள்ளது.