இன்று நரசிம்ம ஜெயந்தி – 06/05/2020
2020ம் ஆண்டு மே மாதம் 06ம் தேதி நரசிம்மர் ஜெயந்தி கொண்டாடப்படுகிறது.
மகா விஷ்ணுவின் தசாவதாரங்களில் 4வது அவதாரம் தான் நரசிம்ம அவதாரம்.


அன்று அதிகாலை பிரம்ம முகூர்த்த வேளையிலேயே எழுந்து, தீபம் ஏற்றி வைத்து, நரசிம்மரை மனதார வேண்டிக் கொண்டு, தூய்மையான பக்தியில் எவரொருவர் தனக்குள்ள கஷ்டங்களை எல்லாம் தீர்க்க வேண்டும் என்று வேண்டிக் கொள்கிறாரோ, அவருக்கு நிச்சயமாக நல்ல தீர்வு உடனடியாக கிடைக்கும் என்பதில் எந்த ஒரு சந்தேகமும் இல்லை.
நரசிம்மர் படத்தை வீட்டில் வைத்து வழிபடலாமா? பூஜை செய்யலாமா? என்ற சந்தேகம் அனேக பக்தர்களுக்கு உள்ளது. பக்த பிரகலாதனை மடியில் அமர வைத்திருக்கும் நரசிம்மர் படத்தையோ அல்லது லட்சுமி தேவியை மடியில் அமரவைத்திருக்கும் நரசிம்மர் படத்தையோ தாராளமாக வீட்டில் வைத்து பூஜை செய்யலாம்.
நரசிம்மர், விஷ்ணுவின் அம்சம் என்பதால் இவருக்குத் துளசி இலைகளால் அர்ச்சனை செய்யலாம். இது தவிர, செவ்வரளி சிகப்பு செம்பருத்தி போன்ற பூக்களையும் நரசிம்மருக்குச் சமர்ப்பணம் செய்யலாம்.
நரசிம்மர் ஜெயந்தி தினத்தன்று மாலை 6.30 மணியிலிருந்து 7.20 மணிக்குள் உங்களுடைய விரதத்தை நிறைவு செய்து கொள்ள வேண்டும் என்பது குறிப்பிடத்தக்கது. உங்களால் முடிந்த நைவேத்தியத்தை நரசிம்மருக்குப் படைக்கலாம்.
அவரவர் உடல் சூழ்நிலைக்கு ஏற்ப விரதமிருந்து, நரசிம்ம ஜெயந்தி விரதத்தைச் சிறப்பாக நிறைவு செய்ய வேண்டும் என்ற கருத்தை முன்வைத்து இந்த பதிவினை நிறைவு செய்து கொள்ளலாம்