டெல்லி:
டெல்லி ஜேஎன்யூ பல்கலைக்கழகத்தில் மூகமூடி அணிந்த கும்பல் ஒன்று, அங்கு ஜே.என்.யு.எஸ்.யு தலைவர் ஆயி கோஷின் தலையில் இரும்பு கம்பியால் தாக்கியது. இதில் பலத்த காயம் அடைந்த ஆயுஷ் கோஷ் எய்ம்ஸ் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.
இதுகுறித்து தகவல் அறிந்த ஆயுஷ் கோஷின் பெற்றோர் உடடினயாக மருத்துவமனை விரைந்தனர். அங்கு தங்களது மகளை சந்தித்தும், மருத்துவர்களிடம் சிகிச்சை குறித்து கேட்டறிதவர்கள், பின்னர் செய்தியாளர்களை சந்தித்தனர். அப்போது, ‘இன்று என் மகள் தாக்கப்பட்டிருக்கிறார், நாளை நானும் தாக்கப்படலாம் என்று அதிர்ச்சி தெரிவித்தார்.
உலக தலைவர்களை உருவாக்கிய பிரசித்தி பெற்ற டெல்லி ஜேஎன்யூ பல்கலைக்கழகம் சமீபகாலமாக பல்வேறு சர்ச்சைகளில் சிக்கி சீரழிந்து வருகிறது. கடந்த இரு மாதங்களாக விடுதி சம்பந்தமாக போராட்டங்கள் நடைபெற்று வந்த நிலையில், தற்போது இயல்பு நிலை திரும்பி மாணவர்கள், செமஸ்டருக்கு தயாராகிக்கொண்டிருந்தனர்.
இந்த நிலையில், நேற்று மாலை பல்கலைக்கழக வளாகத்திற்குள் நுழைந்த 50 பேருக்கும் மேற்பட்ட முகமூடி கும்பல் கண்ணில் பட்ட மாணவ, மாணவியரையும், விடுதியில் தங்கியிருந்த மாணவர்களையும், தடுக்கச் சென்ற பேராசிரியர்களையும் இரும்பு ராடு, உருட்டுக்கட்டை, ஹாக்கி பேட் போன்ற ஆயுதங்களால் சகட்டுமேனிக்கு தாக்கியது.
இந்த தாக்குதலில் ஜேஎன்யு மாணவர் அமைப்பின் தலைவி அய்ஷே கோஷுக்கு தலையில் பலத்த காயம் ஏற்பட்டது. அங்கு பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டிருந்த தனியார் காவலாளிகளும் காயமடைந்தனர்,
நிலைமை கட்டுக்கடங்காமல் சென்ற நிலையில், பல்கலைக்கழக பதிவாளர், டெல்லி காவல்துறைக்கு தகவல் அளித்ததைத் தொடர்ந்து அவர்கள் விரைந்து வந்தனர். இந்த நிலையில் தாக்குதல் நடத்திய கும்பல் அங்கிருந்து தப்பித்துச் சென்றனர்.
காயமடைந்தவர்களை காவல்துறையினர் மீட்டு டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவர்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
இதைத்தொடர்ந்து இரவு 9,30 மணி அளவில் ஜாமியா மில்லியா மற்றும் டெல்லி பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த நூற்றுக்கணக்கான மாணவர்கள், டெல்லி போலீஸ் தலைமையகம் அருகே விடிய விடிய ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
இந்த தாக்குதலுக்கு வலதுசாரி மாணவர் அமைப்பான ஏபிவிபி-யைச் சேர்ந்தவர்களே காரணம் என புகார் கூறப்பட்டு வருகிறது. ஆனால், மாணவர்கள் புதிய செமஸ்டருக்கு பதிவு செய்வதைத் தடுக்கும் நோக்கிலேயே போராட்டம் நடத்திவரும் மாணவர்கள் கம்ப்யூட்டர் இணைப்புகளை சேதப்படுத்தியதுடன் தங்களையும் தாக்கியதாக ஏபிவிபி மாணவர்கள் புகார் கூறியுள்ளனர்,
இந்த நிலையில் தாக்குதலில் பலத்த காயம் அடைந்த மாணவர் சங்கத் தலைவி ஆயிஷ் கோஷ்-க்கு தலையில் ஐந்து தையல்களுடன் போடப்பட்டு உள்ளது என்று கூறிய அவரது தந்தை, ‘இன்று எனது மகள், நாளை என்னையும் தாக்குவார்கள் என்று தெரிவித்தார். தற்போது நாட்டின் நிலைமை நிலையற்றதாக இருக்கிறது, இது பயத்தை ஏற்படுத்துகிறது, நாங்கள் பயப்படுகிறோம். என் மகள் தாக்கப்பட்டாள், நாளை வேறு யாராவது தாக்கப்படுவார்கள். யாருக்கு தெரியும், நான் கூட அடிக்கப்படலாம் என்று கூறினார்.
அப்போதுது குறுக்கிட்ட கோஷின் தாய் டெல்லி பல்கலைக்கழக துணைவேந்தர் பதவி விலக வேண்டும் என்று கோரியதுடன், தனது மகளை போராட்டங்களில் இருந்து பின்வாங்குமாறு கேட்க மாட்டேன் என்று உறுதிப்படுத்தினார்.‘
டெல்லி மாணவர்கள் தாக்கப்பட்ட விவகாரம் நாடு முழுவதும் மீண்டும் மாணவர்கள் போராட்டத்தை தீவிரப்படுத்தி உள்ளது.