சென்னை: தமிழ்நாட்டில் வாக்காளர் பட்டியல் தீவிர சீர்திருத்த பணிகக்கான பூர்த்தி செய்யப்பட்ட எஸ்ஐஆர் படிவங்களை ஒப்படைக்க இன்றே கடைசி நாள். இதையொட்டி, புதிய வாக்காளர்கள் இன்றுமுதல் விண்ணப்பிக்கலாம் என அறிவிக்கப்பட்டு உள்ளது. அதன்படி  18 வயது பூர்த்தியான புதிய வாக்காளர்களுக்கு 6-ம் எண் படிவத்தை  நிரப்பி வழங்கலாம் என அறிவிக்கப்பட்டு உள்ளது.

முன்னதாக, இந்திய தலைமை தேர்தல் ஆணையத்தின் வழிகாட்டுதல்படி, தமிழகத்தில் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தப் பணிகள் கடந்த நவம்பர் மாதம் 4-ம் தேதி தொடங்கியது. இப்பணிகள் டிச.4-ம் தேதி முடிவடைய இருந்த நிலையில், நாளை 11-ம் தேதி வரை காலக்கெடு நீட்டிக்கப்பட்டது.

தமிழகத்தில் 6 கோடியே 41 லட்சத்து 14 ஆயிரத்து 587 வாக்காளர்கள் உள்ளனர். இவர்களில் டிசம்பர் 10ந்தேதி   நிலவரப்படி 6 கோடியே 40 லட்சத்து 83 ஆயிரத்து 413 படிவங்கள் பதிவேற்றம் செய்யப்பட்டு உள்ளதாக கூறப்பட்டு உள்ளது.

அதாவது கணக்கீட்டு படிவங்களை பதிவேற்றும் பணி 99.55 சதவீதம் முடிவடைந்துள்ளது என தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.

4,207 வாக்காளர்கள் மட்டுமே படிவங்களை பூர்த்தி செய்து தரவில்லை.

இந்த நிலையில்,  எஸ்ஐஆர் கணக்கீட்டு படிவம் பூர்த்தி செய்து பெறுதல், பதிவு செய்தல் ஆகிய பணிகள் இன்று (டிசம்பர் 11) நிறைவு பெறுகிறது.  ஏற்கனவே டிசம்பர் 4ந்தேதி முடிவதாக அறிவிக்கப்பட்ட நிலையில், தமிழ்நாட்டில் பெய்த மழை மற்றும் பல்வேறு காரணங்களால், அதற்கான காலஅவகாசம் டிசம்பர் 11ந்தேதி வரை நீட்டிப்பு செய்து தேர்தல் ஆணையம் அறிவித்தது. அதன்படி, இன்று கடைசிநாளாகும். இதுவரை படிவங்களை வாங்கி பூர்த்தி செய்யாத வாக்காளர்கள் இன்றே இந்த இறுதி சந்தர்ப்பத்தை பயன்படுத்தி நிரப்பி கொடுக்க வேண்டும்

 இதைத் தொடர்ந்து, வரைவு வாக்காளர் பட்டியல் டிச.16-ம் தேதி வெளியிடப்படும்.

அன்று முதல், வரும் ஜன 15-ம் தேதி வரை ஆட்சேபங்கள் இருந்தால் தெரிவிக்கலாம். மேலும், வாக்காளர் பெயர் சேர்த்தல், நீக்கம் செய்தல் அல்லது ஏற்கெனவே உள்ள பதிவுகள் குறித்து மறுப்பு தெரிவிக்கலாம். அவற்றின் மீது பரிசீலனைகள் நடைபெறும்.

இறுதி வாக்காளர் பட்டியல் பிப்.14-ம் தேதி வெளியிடப் படுகிறது.

இந்தப் பணிகளுக்கு 68 ஆயிரத்து 470 வாக்குச்சாவடி நிலை அலுவலர்கள் பயன்படுத்தப்பட்டு உள்ளனர். 2.46 லட்சம் அரசியல் கட்சி முகவர்கள் இந்தப் பணியில் ஈடுபட்டு உள்ளனர்.

எஸ்.ஐ.ஆர். பணிகள் இன்று நிறைவடைந்ததும் அந்த விவரங்களை அரசியல் கட்சிகளின் முகவர்களுக்கு வாக்குச்சாவடி நிலை அலுவலர்கள் வழங்குவார்கள். அவர்களும், தகுதியுள்ள வாக்காளர்கள் யாரும் விடுபட்டுவிடாதபடி ஆய்வு செய்வார்கள்.

இந்த நிலையில் 18 வயது பூர்த்தியான புதிய வாக்காளர்களுக்கு 6-ம் எண் படிவத்தை வாக்குச்சாவடி நிலை அலுவலர்கள் வழங்க தொடங்கிவிட்டனர். 16-ந்தேதி வரைவு வாக்காளர் பட்டியல் வெளியிடப்பட உள்ளது. அப்போது மாவட்ட தேர்தல் அதிகாரி, தலைமை தேர்தல் அதிகாரி அலுவலகங்களுக்கான இணையதளத்தில் வரைவு வாக்காளர் பட்டியல் வெளியிடப்படும். அதில் ஒவ்வொரு வாக்காளரும் தங்களின் பெயர் விவரங்களை சரிபார்க்க வேண்டும். அந்த பணியை எளிதாக்கும் வகையில், வாக்காளர் தனது அடையாள அட்டையின் நம்பரை பயன்படுத்தி, வரைவு வாக்காளர் பட்டியலில் பெயரை தேடுவதற்கான வசதியையும் தேர்தல் கமிஷன் அறிவிக்க உள்ளது.

[youtube-feed feed=1]