சென்னை: இன்று 30வது நாள்: திமுக அரசின் தனியார்மயத்தை எதிர்த்து, போராடும் தூய்மைப் பணியாளர்களின் போராட்டம் இன்று 32வது நாளை எட்டியுள்ளது. பல்வேறு முறைகளில் தூய்மை பணியாளர்கள் போராடி வரும் நிலையில், அவர்களின் போராட்டத்தை தமிழ்நாடு அரசு காவல்துறையினர் கொண்டு முடக்கி வருகிறது.

சென்னை மாநகராட்சி தூய்மைப் பணிகள் தனியார் மயமாக்கப்பட்டு உள்ளன. இந்த தனியார்மயமாக்கலுக்கு தூய்மை பணியாளர்கள் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். அரசின் தனியார் மயத்துக்கு சில மண்டலங்களில் எதிர்ப்பு இல்லாத நிலையில், ஒருசில மண்டலங்களில் கடும் எதிர்ப்பு எழுந்துள்ளது. இதனால், அரசுக்கு எதிராக தூய்மை பணியாளர்கள் சில மாதங்களாக போராடி வருகின்றனர். அவர்களின் போராட்டம் காவல்துறையினரைக் கொண்டு ஒடுக்கப்பட்டு வருகிறது.
இந்த நிலையில், தூய்மைப் பணியாளர்கள் உயர்நீதிமன்றத்தின் அனுமதியோடு மேற்கொண்டு வரும் காலவரையற்ற உண்ணாவிரதப் போராட்டம் இன்று (டிசம்பர் 18, செவ்வாய்) 32-வது நாளை எட்டியுள்ளது. தூங்யமை பணியாளர்களின் போராட்டம் ஒரு மாதத்தை கடந்தும், இதுவரை மாநகராட்சியோ, திமுக அரசோ, அவர்களிடம் பேசி, போராட்டத்தை முடிவுக்கு கொண்டுவருவதில் ஆர்வம் காட்டவில்லை. மேலும், தொழிலாளர்களுக்கு தோள்கொடுப்பதாக கூறிக்கொள்ளும் கம்யூனிஸ்டு கட்சிகளும் கண்களை மூடிக்கொண்டே இருக்கின்றன. இதனால், தூய்மை பணியாளர்கள் கடுமையான மன அழுத்தத்தில் தங்களது போராட்டங்களை தொடர்ந்து வருகின்றனர். இது தொழிலாளர்கள் மத்தியில் கவலையை ஏற்படுத்தியுள்ளது. இந்தபோராட்டம் காரணமாக யாருக்காவது ஏதேனும் அசம்பாவிதம் நடந்தால், அதற்கு திமுக அரசே பொறுப்பு என கூறி வருகின்றனர்.
இந்த நிலையில், போராட்டத்தில் ஈடுபட்டு வரும் தூய்மை பணியாளர்களை உழைப்போர் உரிமை இயக்கத்தின் (LTUC) நிர்வாகிகள் சந்தித்து பேசினார். பின்னர், அவர்கள் , சென்னை மாநகராட்சி துணை மேயர் மகேஷ் குமாரைச் சந்தித்துப் பேசினர்.
இந்தச் சந்திப்பு குறித்து வழக்கறிஞர் பாரதி மற்றும் சுரேஷ் கூறுகையில், “துணை மேயர் நேர்மறையான பதிலை அளித்துள்ளார். இக்கோரிக்கைகளை முதலமைச்சரின் கவனத்திற்கு கொண்டு செல்வதாக அவர் உறுதியளித்துள்ளார்” என்றனர்.
சென்னை மாநகராட்சியின் திரு.வி.க நகர் மற்றும் ராயபுரம் ஆகிய மண்டலங்களில் கழிவு மேலாண்மைப் பணிகளைத் தனியார் வசம் ஒப்படைக்கும் மாநகராட்சியின் முடிவை எதிர்த்து இந்தப் போராட்டங்கள் நடைபெற்று வருகின்றன. கடந்த ஆகஸ்ட் 1-ஆம் தேதி தொடங்கிய இரண்டாம் கட்டப் போராட்டத்தின் தொடர்ச்சியாக, நவம்பர் 18 முதல் பணியாளர்கள் காலவரையற்ற உண்ணாவிரதத்தில் ஈடுபட்டுள்ளனர்.
குறிப்பாக, கடந்த ஜூலை 31-ஆம் தேதி வரை பணியாற்றிய 1,400 தற்காலிக தூய்மைப் பணியாளர்களை மீண்டும் அதே பணியிடங்களில் அமர்த்த வேண்டும் என்பதே இவர்களின் முக்கிய கோரிக்கையாக உள்ளது.
கடந்த டிசம்பர் 12-ஆம் தேதி, சென்னை மெரினாவில் உள்ள முன்னாள் முதலமைச்சர் கருணாநிதியின் நினைவிடம் முன்பாக இந்தப் பணியாளர்கள் தர்ணாவில் ஈடுபட்டனர். அப்போது 400-க்கும் மேற்பட்ட தொழிலாளர்களைக் காவல்துறையினர் கைது செய்து அப்புறப்படுத்தியது குறிப்பிடத்தக்கது. தனியார்மயமாக்கல் என்ற பெயரில் தங்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்படுவதாகக் கூறும் தூய்மைப் பணியாளர்கள், அரசுத் தரப்பிலிருந்து உறுதியான அறிவிப்பு வரும் வரை போராட்டத்தைத் தொடரப்போவதாகத் தெரிவித்துள்ளனர்.
இன்று போராட்டக் களத்திற்கு நேரில் வந்த சி.பி.ஐ (எம்எல்) லிபரேஷன் நாடாளுமன்ற உறுப்பினர் ராஜாராம் சிங், தொழிலாளர்களுக்குத் தனது ஆதரவைத் தெரிவித்தார். பின்னர் இது தொடர்பாக முதலமைச்சருக்கு அவர் எழுதியுள்ள கடிதத்தில் பணி பாதுகாப்பு, நிர்வாகத் தடைகள் குறித்து குறிப்பிட்டுள்ளார்.
ஜூலை 31 வரை பணியில் இருந்த 1,400 தொழிலாளர்களையும் மீண்டும் அதே பணியில் அமர்த்த அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும். முதலமைச்சர் இந்த விஷயத்தில் சுமுகமான தீர்வு காண விரும்பினாலும், அதிகாரிகள் தரப்பில் சில முட்டுக்கட்டைகள் இருப்பதாகத் தொழிலாளர்கள் கருதுகின்றனர். இது குறித்து செய்தியாளர்களிடம் பேசிய ராஜாராம் சிங், “இந்த நகரம் உழைக்கும் மக்களின் தோள்களில் தான் இயங்குகிறது. முதலமைச்சர் இந்த விவகாரத்தில் நல்ல முடிவை எடுப்பார் என நம்புகிறேன்” எனத் தெரிவித்தார்.
[youtube-feed feed=1]