புனே

உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டியில் இன்று நியூசிலாந்துடன் தென் ஆப்ரிக்கா மோதுகிறது.

இன்று உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரில் புனேயில் உள்ள மராட்டிய கிரிக்கெட் சங்க விளையாட்டரங்கத்தில் நடக்கும் 32-ஆவது லீக் ஆட்டத்தில் நியூசிலாந்து மற்றும்-தென் ஆப்பிரிக்கா அணிகள் மோதுகின்றன.

அடுத்தடுத்து நியூசிலாந்து அணி தனது முதல் 4 ஆட்டங்களில் இங்கிலாந்து, நெதர்லாந்து, வங்காள தேசம், ஆப்கானிஸ்தான் அணிகளை \வென்றது. பிறகு அந்த அணி 2 ஆட்டங்களில் முறையே 4 விக்கெட் வித்தியாசத்தில் இந்தியாவிடமும், 5 ரன் வித்தியாசத்தில் ஆஸ்திரேலியாவிடமும் வீழ்ந்து புள்ளி பட்டியலில் 3-வது இடத்தில் உள்ளது. இறுதியாக நடந்த ஆஸ்திரேலியாவுக்கு எதிரான ஆட்டத்தில் 389 ரன் இலக்கை நெருங்கி வந்து தோற்றது. நியூசிலாந்து அணி மீண்டும் வெற்றிப் பாதைக்குத் திரும்பும் எண்ணத்துடன் களம் காண உள்ளது.

இதைப் போல் பவுமா தலைமையிலான தென் ஆப்பிரிக்கா 6 ஆட்டங் களில் ஆடி 5 வெற்றி, ஒரு தோல்வி கண்டுள்ளது. நெதர்லாந்திடம் தனது 3-வது லீக் ஆட்டத்தில் நெதர்லாந்திடம் 38 ரன் வித்தியாசத்தில் அதிர்ச்சி தோல்வி அடைந்த தென் ஆப்பிரிக்கா மற்ற ஆட்டங்களில் இலங்கை, ஆஸ்திரேலியா, இங்கிலாந் து, வங்காளதேசம், பாகிஸ்தான் ஆகிய அணிகளை பதம் பார்த்து 2-வது இடத்தில் இருக்கிறது. தொடர்ச்சியாக 3 ஆட்டங்களில் தென்ஆப்பிரிக்கா வெற்றி பெற்றுள்ளது. தென் ஆப்ரிக்க அணியில் முதுகு வலி காரணமாகக் கடந்த போட்டியில் ஆடாத ரபடா அணிக்கு திரும்புவார் என்று தெரிகிறது.

இந்த போட்டிக்கான இரு அணிகளின் உத்தேச பட்டியல்:-

நியூசிலாந்து:

டிவான் கான்வே, வில் யங், ரச்சின் ரவீந்திரா, டேரில் மிட்செல், டாம் லாதம் (கேப்டன்), கிளென் பிலிப்ஸ், ஜேம்ஸ் நீஷம்,  மிட்செல் சான்ட்னெர், மேட் ஹென்றி, டிரென்ட் பவுல்ட், லோக்கி பெர்குசன் அல்லது டிம் சவுதி.

தென்ஆப்பிரிக்கா: 

பவுமா (கேப்டன்), குயின்டான் டி காக், வான்டெர் டஸன், மார்க்ரம், கிளாசென், டேவிட் மில்லர், மார்கோ யான்சென்,  ஜெரால்டு கோட்ஜி, கேஷவ் மகராஜ், ரபடா, தப்ரைஸ் ஷம்சி அல்லது இங்கிடி.