சென்னை

ன்று கோவை மற்றும் நீலகிரி மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்புள்ளது.

 

இன்று சென்னை வானிலை ஆய்வு மையம் ஒரு செய்திக்குறிப்பு வெளியிட்டுள்ளது.

அதில்,

”இன்று தமிழகம் நோக்கி வீசும் மேற்கு திசைக் காற்றின் வேகமாறுபாடு காரணமாகத் தமிழகம், புதுச்சேரி காரைக்காலில் ஓரிரு இடங்களில் இடி, மின்னலுடன் கூடிய, லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.  

மேலும் இன்று கோவை மாவட்டத்தின் மலைப் பகுதிகள் மற்றும் நீலகிரி மாவட்டத்தில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது.  11 ஆம் தேதி முதல் வரும் 15 ஆம் தேதி வரை ஓரிரு இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.

அடுத்த 24 மணி நேரத்துக்குச் சென்னை மற்றும் புறநகர்ப் பகுதிகளில் வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படு சில பகுதிகளில் இடி, மின்னலுடன் கூடிய, லேசான மழை பெய்யக்கூடும்.   

நகரில் அதிகபட்ச வெப்பநிலை 97 டிகிரி, குறைந்தபட்ச வெப்பநிலை 79 டிகிரி ஃபாரன்ஹீட் அளவை ஒட்டியிருக்கும்.”

என்று கூறப்பட்டுள்ளது.